பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி
இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. ஆனால் அறிவியலைப் பொறுத்தவரையில் நம்பிக்கையின் அடிப்படையில் எதுவுமே முடிவு செய்யப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும்.