மனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்

மனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்

மனித உடலே ஒரு இயற்கையின் ஆச்சரியம் தானே, பல்வேறு பட்ட உடல் உறுப்புக்களை கொண்டுள்ள இந்த மனித உடலில், பத்தாயிரம் வகைக்கும் மேற்பட்ட பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள் வாழுகின்றன.
புதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்

புதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்

இந்த HD 219134b, பூமியைவிட அண்ணளவாக 1.6 மடங்கு பெரியது, அதேவேளை பூமியைப் போல 4 மடங்கு திணிவைக்கொண்டது. இதில் குறிப்பிடவேண்டிய மற்றுமொரு முக்கியவிடயம், இது தனது விண்மீனை வெறும் மூன்றே நாட்களில் சுற்றி வருகிறது! அவ்வளவு அருகில் தனது தாய் விண்மீனை சுற்றிவருகிறது!
பிரபஞ்சத்திற்கான சமையல் குறிப்பு

பிரபஞ்சத்திற்கான சமையல் குறிப்பு

இப்போது இந்தப் பிரபஞ்சம் உருவாகி 14 பில்லியன் வருடங்கள் ஆகிறது, அத்தோடு இந்த வெளியில் 92 மூலகங்கள் காணப்படுகின்றன. இந்த 92 மூலகங்களால் தான் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும் உருவாக்கப்பட்டுள்ளது, பாரிய விண்மீன்கள் தொடக்கம், சிறிய பூச்சிகள் வரை! உங்களுக்குப் பிடித்தமான சாக்லேட் பிஸ்கட் கூட இந்த இந்த மூலகங்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
முடிபோல பனி? இயற்கையின் விந்தை

முடிபோல பனி? இயற்கையின் விந்தை

இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது சற்று வித்தியாசமான உயிரினம் போலத் தெரிகிறதா? வயதுபோன தாத்தாவின் சவரம் செய்யப்பட்ட முடி? இல்லை இல்லை! இது வெறும் பனி என்றல் உங்களால் நம்ப முடிகிறதா? விரிவாகப் பார்ப்போம்
மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்

மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்

நுண்ணலைகள், ரேடியோஅலைகளை விட அலைநீளம் குறைந்தவை, அதாவது ரேடியோ அலைகளின் அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து வரும்போது, அது ஒரு கட்டத்தில் நுண்ணலைகளாக மாறிவிடும். இது ரேடியோ அலைகளின் அலைநீளத்திற்கு மிக அருகில் இருந்தாலும் தனியான தனியான அலைக்கற்றை வடிவமாகவே கருதப்பட்டு, நுண்ணலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
மின்காந்தக் கதிர்வீச்சு என்றால் என்ன?

மின்காந்தக் கதிர்வீச்சு என்றால் என்ன?

மின்காந்த அலைகள் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் பயன்படுத்தும் ரேடியோ தொடங்கி, செல்பேசி வரை மின்காந்த அலைகளைப் பயன்படுத்தியே இந்தக் கருவிகள் எல்லாம் தொழிற்படுகின்றன.
ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்

ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்

எழுதியது: சிறி சரவணா

நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்ததுண்டா? அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா? மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும்! இந்தப் பிரபஞ்சத்திலும் இப்படியான ஒரு செயற்பாடு நடந்துள்ளது – இந்தப் பிரபஞ்சம் இளமையாக இருக்கும்போது.

நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு

நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு

சூரியத்தொகுதிக்கு வெளியே இருக்கும் விண்மீன்களைச் சுற்றி இருக்கும் கோள்களைக் கண்டுபிடிப்பதற்காகவே விண்ணுக்குச் செலுத்தப்பட்ட தொலைக்காட்டித் திட்டம் “கெப்லர்”. 2009 இல் விண்ணுக்குச் சென்ற கெப்லர் இதுவரை ஆயிரக்கணக்கான புறவிண்மீன் கோள்களை (Exoplanets) கண்டறிந்துள்ளது. அதில் அதிகமானவை நமது வியாழன் போன்ற மிகப்பெரிய வாயுஅரக்கன் வகையைச் சேர்ந்த கோள்கள்.
மாவீரன் அலக்சாண்டர் – தெரிந்ததும் தெரியாததும்

மாவீரன் அலக்சாண்டர் – தெரிந்ததும் தெரியாததும்

இந்தப் பதிவில் கொஞ்சம் வரலாற்றையும் பார்க்கலாம். நமக்கு கொஞ்சம் தூக்கலாகவே பரீட்சியமான வரலாற்றுப் பெயர், மாவீரன் அலக்சாண்டர். நமது உள்ளூர் வரலாற்றில் இடம்பெராவிடினும், இவனது மாவீரமும், துணிச்சலும் அக்காலத்திலேயே ஐரோப்பாவில் இருந்து தற்கால பாகிஸ்தான் வரை தனது ஆட்சியை நிலைநிறுத்திய விதமும் இவனை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சாதனைகள் எனலாம்.
பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்

பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்

ஒரு விண்மீன் பேரடை என்பது, மிக அதிகமான விண்மீன்களின் தொகுதியாகும். இந்தப் பேரடைகள் பல மில்லியன் தொடக்கம் பில்லியன் கணக்கான விண்மீன்கள், விண்வெளித்தூசு மற்றும் வேறு பல வான்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு ஆகும்.