பிரபஞ்ச அரக்கனுக்குள் இரண்டு கருந்துளைகள்

பிரபஞ்ச அரக்கனுக்குள் இரண்டு கருந்துளைகள்

குவாசார் (Quasar - quasi-stellar radio source) எனப்படுவது பிரபஞ்சத்தில் காணப்படும் பாரிய சக்திவாந்த பொருளாகும். குவாசார்கள் பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்டுள்ள விண்மீன் பேரடைகளை விடப் பிரகாசமானவை.
விண்ணில் ஒரு வண்ணத்துப்பூச்சி

விண்ணில் ஒரு வண்ணத்துப்பூச்சி

இந்தப்படத்தில் இருப்பது இரட்டை ஜெட் நெபுலா. பார்க்க அதன் இருபுறமும் ஜெட் போல வாயுக்கள் பீச்சப்படுவதால் இதனை இப்படி அழைக்கின்றனர். சிலர் இதனை வானின் வண்ணத்துப்பூச்சி என்றும் அழைக்கின்றனர்.
தனிமையில் ஒரு விண்மீன் பேரடை

தனிமையில் ஒரு விண்மீன் பேரடை

பொதுவாக விண்மீன் பேரடைகள் எல்லாம் ஒன்றுகொன்று அருகில் ஒரு குழுவாகவே காணப்படும். உதாரணமாக நமது பால்வீதி உள்ளது உட்குழு (Local Group) எனப்படும் ஒரு தொகுதியில், அன்றோமீடா உள்ளடங்கலாக 57 முக்கிய விண்மீன் பேரடைகள் இதில் உண்டு.
கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்

கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்

இரவில் இலத்திரனியல் சாதனங்களில் வாசிப்பை மேற்கொள்ளும் சாதாரண ஒருவருக்கு, அண்ணளவாக ஒரு மணி நேரம்வரை தூக்கம் தள்ளிப்போகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பகல்வேளையில் அவர் பல்வேறு மறைமுகமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது.
வானில் ஒரு புதிய ஆச்சரியம்!

வானில் ஒரு புதிய ஆச்சரியம்!

நோவா எனப்படுவது ஒரு பாரிய விண்மீன் வெடிப்பாகும். இது குறித்த விண்மீனைப் பலமடங்கு பிரகாசமாக்கும். இந்தத் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிவது Nova Vul என்கிற விண்மீன் வெடிப்பின் பின்னர் எஞ்சிய மிச்சமாகும்.
ஆய்வுகூடத்தில் வளர்த்த மனித மூளை

ஆய்வுகூடத்தில் வளர்த்த மனித மூளை

முதன்முறையாக ஆய்வுகூடத்தில் மனித மூளையை செயற்கையாக விஞ்ஞானிகள் வளர்த்துள்ளனர். தாயின் வயிற்றினுள் இருக்கும் ஐந்து வார சிசுவிற்கு இருக்கும் அளவு உள்ள இந்த மூளை வெறும் பென்சில் அழிறப்பர் அளவுள்ளது.
கருந்துளைக்கே சவால் விடும் சூப்பர் விண்மீன்

கருந்துளைக்கே சவால் விடும் சூப்பர் விண்மீன்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பீற்றுவிசையை உருவாக்குவதில் போட்டியில்லா சாம்பியனாக இருப்பது கருந்துளைகள். கருந்துளைகள் உருவாக்கும் பீற்றுவிசையை மற்றைய வான் பொருட்கள் உருவாக்கும் பலவீனமான பீற்றுவிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் பீற்றுவிசைகள் கருந்துளையினது போலலாமல் பூமியில் இருந்து பார்க்கும் அளவிற்கு பிரகாசமாக இருந்ததில்லை.
சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்

சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது! கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.
பிரபஞ்ச பெயர்ப் புதிர்

பிரபஞ்ச பெயர்ப் புதிர்

உங்களிடம் செல்லப்பிராணி எதாவது இருக்கிறதா? அப்படியிருந்தால் அதன் பெயர் என்ன? இப்போது உங்கள் செல்லப்பிராணி பத்துக் குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். பிறந்த குட்டிகளை என்ன சொல்லி அழைப்பீர்கள்? அடுத்ததாக இந்தப் பத்துக் குட்டிகளும் பெரிதாகி ஒவ்வொன்றும் பத்துப் பத்துக் குட்டிகளைப் பெற்றெடுத்தால் அவற்றை எப்படி அழைப்பீர்கள்?
ஆபிரிக்க யானைகள்

ஆபிரிக்க யானைகள்

நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு இந்த ஆபிரிக்க யானைகள். ஆசியாவில் வாழும் யானைகளை விட சற்றுப் பெரிய இந்த யானைகள், பாரிய ஆபிரிக்க கண்டம் போன்ற வடிவில் அமைந்த காதுகளைக் கொண்டு காணப்படும். ஆனால் ஆசிய யானைகள் வட்ட வடிவமான காதுகளைக் கொண்டிருக்கும்.