இரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி
பால்வீதி எனப்படும் சுழல் விண்மீன் பேரடையில் இருக்கும் ஒரு சுழல் கரத்தின் ஒரு பகுதியிலேயே நாம் இருக்கிறோம். விண்மீன் பேரடை (galaxy) என்பது எண்ணிலடங்காத விண்மீன்கள் ஈர்ப்புவிசையால் கட்டுண்டு இருக்கும் ஒரு அமைப்பாகும். நமது பால்வீதி இப்படியான ஒரு மிகப்பெரிய விண்மீன்பேரடையாகும்.