தப்பியோடும் பெரும்திணிவுக் கருந்துளை
பெரும்திணிவுக் கருந்துளை என்பது அதனது பெயர் சொலவது போலவே மிக மிகத் திணிவுகொண்ட கருந்துளைகளாகும். இவை சூரியனைப் போல பில்லியன் மடங்கு திணிவைக்கூட கொண்டிருக்கும். எண்ணிப்பார்க்க முடியாதளவுக்கு சக்தியைக் கொண்டிருக்கும் இந்தக் கருந்துளைகள் அருகில் இருப்பவற்றை கபளீகரம் செய்வதிலும் வல்லவை.