மாதம்: அக்டோபர் 2017

ஒரு வால்வெள்ளியா? இல்லை, இரண்டு சிறுகோள்களா?

சிறுகோள் 288P  தொலைவில் இருக்கும் வியாழனுக்கும், செவ்வாய்க்கும் இடையே உள்ள சிறுகோள்பட்டியில் சம்சாரிக்கிறது. இதனால் இதனை அவதானிப்பது என்பது கடினமான காரியம்.  ஆனாலும், அண்மையில் அது பூமிக்கு அருகில் கடந்து சென்றதால், அதனை தெளிவாக அவதானித்து ஆய்வுசெய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அவதானித்ததில் கிடைத்த ஆச்சர்யம் என்னவென்றால், 288P எனப்படும் சிறுகோள் ஒன்றல்ல, மாறாக இரண்டு சிறுகோள்கள்!

ஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கோள், புதிய தார்வீதியை விடக் கருமையானது. இதன் மேற்பரப்பில் விழும் ஒளியை பெருமளவு கபளீகரம் செய்கிறது. இன்னும் தெளிவாகக் கூறினால் இதன் மேற்பரப்பில் விழும் ஒளியில் வெறும் 10% மான ஒளியே மீண்டும் தெறிப்படைகிறது.