பெரும் திணிவு கொண்ட விண்மீன் பேரடைகள், விண்மீன் கொத்துக்கள் போன்ற விண்பொருட்கள் அவற்றின் ஒப்பற்ற திணிவின் காரணமாக அதனைச் சுற்றியுள்ள வெளி-நேரத்தை வளைக்கும். எனவே அதனூடாக ஒளி செல்லும் போது அதுவும் வளைந்து ஒரு ஆடியில் எப்படி செல்லுமோ அதனைப்போலவே பயணிக்கும். இதனையே நாம் பிரபஞ்ச வில்லை என்கிறோம்.
இம்மிகப்பழைய விண்மீன் பேரடையை கண்டறிய விஞ்ஞானிகள் ஹவாய் தீவில் இருக்கும் சுபரு (Subaru) தொலைநோக்கி மூலம் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பிரபஞ்ச வரைபடத்தை பயன்படுத்தியுள்ளனர். அவ்வரைபடத்தை ஆய்வு செய்யும்போது, குறிப்பிட்ட இடத்தில் மிக அதிகளவில் செறிவாக பல அம்சங்கள் இருப்பதை இவர்கள் கண்டனர்.
நீண்ட நாட்களாகவே பல விண்ணியலாளர்களும் விஞ்ஞானிகளும், சனியையும் வியாழனையும் சுற்றிவரும் துணைக்கோள்களில் திரவநிலையில் நீர் இருக்கும் என்றும் அதில் உயிர்கள் தோன்றி இருக்க வாய்ப்பு மிக அதிகம் என்றும் கருதினர். அதிலும் குறிப்பாக என்சிலாடஸ் முதன்மை பெறக்காரணம், அதில் நாம் நேரடியாக அவதானித்த திரவநிலை நீர்.
பூமியில் சூரியகிரகணம் என்பது நமக்கு எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விடையம்தான். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு கடப்பதால், பூமியின் மேற்பரப்பில் நிலவின் நிழல் விழும். இந்தப் பகுதிக்குள் இருப்பவர்களுக்கு சூரியனை நிலவு மறைப்பது போல இருக்கும்.
பூமியின் பல பகுதிகளிலும் பெரும் புயலும் மிதமிஞ்சிய இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றாலும், சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய புயலோடு இவற்றை ஒப்பிட முடியாது. வாயு அரக்கனான வியாழனில் நிகழும் பெரும் புயல்தான் "பெரும் சிவப்புப் புள்ளி" என அழைக்கப்படுகிறது.
ஜப்பானில் இருக்கும் விண்ணியலாளர் குழு ஒன்று அரிதான சுப்பர்நோவா வெடிப்புகளை கொண்ட 1800 படங்களை சேகரித்துள்ளனர். இவ்வளவு அதிகளவான சுப்பர்நோவா படங்களை எடுக்க, வானில் பெருமளவான பகுதியை இவர்கள் அவதானித்துள்ளனர்.
கடந்த பதிவில் அரிய பூமிக் கருதுகோள் பற்றிப் பார்த்தோம் இல்லையா, இந்தப் பதிவில் பெர்மி முரண்பாட்டுக்கு தீர்வாக இருக்ககூடிய வேறு சில கருதுகோள்களைப் பார்க்கலாம்.