இம்மிகப்பழைய விண்மீன் பேரடையை கண்டறிய விஞ்ஞானிகள் ஹவாய் தீவில் இருக்கும் சுபரு (Subaru) தொலைநோக்கி மூலம் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பிரபஞ்ச வரைபடத்தை பயன்படுத்தியுள்ளனர். அவ்வரைபடத்தை ஆய்வு செய்யும்போது, குறிப்பிட்ட இடத்தில் மிக அதிகளவில் செறிவாக பல அம்சங்கள் இருப்பதை இவர்கள் கண்டனர்.
நீண்ட நாட்களாகவே பல விண்ணியலாளர்களும் விஞ்ஞானிகளும், சனியையும் வியாழனையும் சுற்றிவரும் துணைக்கோள்களில் திரவநிலையில் நீர் இருக்கும் என்றும் அதில் உயிர்கள் தோன்றி இருக்க வாய்ப்பு மிக அதிகம் என்றும் கருதினர். அதிலும் குறிப்பாக என்சிலாடஸ் முதன்மை பெறக்காரணம், அதில் நாம் நேரடியாக அவதானித்த திரவநிலை நீர்.