இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் கோள்கள் பல நிறங்களிலும் அளவுகளிலும் மற்றும் பல்வேறுபட்ட பண்புகளோடு காணப்பட்டாலும், வெகு சில கோள்கள் புதிராகவும், புதினமாகவும் இருப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கிறது.
ஆய்வாளர்கள் 4000 இற்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்களை கண்டறிந்துள்ளனர். இன்னும் கண்டறியப்படாதவற்றின் எண்ணிக்கை மிக மிக அதிகம். கண்டறியப்பட்ட பிறவிண்மீன் கோள்களில் பெரும்பாலானவை நேரடியான அவதானிப்புகள் இன்றியே கண்டறியப்பட்டுள்ளன.
நமது சூரியத் தொகுதி பால்வீதியினுள்ளே இருப்பதால் எம்மால் பால்வீதிக்கு வெளியே சென்று பால்வீதி எப்படியிருக்கும் என்று பார்க்கமுடியாது. எனவே துல்லியமான அளவீடுகள், மற்றும் பால்வீதின் கட்டமைப்புகளின் வேகம் என்பவற்றை துல்லியமாக அளப்பதன் மூலம் பால்வீதியின் முழு கட்டமைப்பை பற்றி தெரிந்துகொள்ளக் கூடியவாறு இருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் முதன்முறையாக கருந்துளை ஒன்றின் படத்தை நேரடியாக பார்த்து அதிசயித்தோம். பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் M87 விண்மீன் பேரடையின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளையினை "நிகழ்வெல்லை தொலைநோக்கி" திட்டத்தின் விஞ்ஞானிகள் எமக்கு படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.