ஒன்றிணைக்கும் அன்பில்

தன் வெளியின் ஓடம் எத்தனை தொன்மையினை கடந்து வந்திருக்கிறது கால நினைவில் இதனையும் இணைத்து விடு. நம் தனித்த விண்ணை அத்தனை உயிர்ப்புடன் நோக்குகிறேன். அன்பு ஒரு பொருட்டல்ல விண் நிறைக்கும் உணர்தல் ஒவ்வொரு தனிமையிலும் வீற்றிருக்கிறது. விண்ணகி மேலும் காத்திரு அகாலம் தன் வினையை எப்பொழுதும் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது. ஒன்றிணைக்கும் அன்பில் மீண்டும் வந்திணை. வளத்தூர் தி. ராஜேஷ் படம்: இணையம்

காலத்தின் இறுதியொன்று

கால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது. அதில் புதிர் நிறைந்த ஒரு நினைவை தேர்ந்தெடுத்தேன். என்றோ கைவிடப்பட்ட நினைவு அது எவ்வித தயக்கமின்றி அனுமதித்தது அந்நினைவு அன்றிருந்த காலம் மீண்டும் உருப்பெறுகிறது. ஒரு நிமிடம் கடந்த நிலையில் வழியெங்கும் நிகழ்கால நினைவு தன்னைத் துரத்துகிறது . மீண்டும் அடையாளமிட்ட தன் நினைவை அங்கயே விட்டு...

இதுவும் யாழ்… இது தான் யாழ்…

நல்லை நகர் நாவலர் பதிதனை காண நினைத்த நேரம் விதி செய்த வேலைகள் ஆயிரம்... ஆயிரம் ... அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு கிடைத்து விட்டது அதிட்டம் தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன் தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல அவர்களின்...

இயற்கையின் நிழல்ப்படம்

அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம் உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம் பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு தன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள் அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த நிழல்களும் பூமியை...

காற்றோடு கதை பேச

காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன் சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன் இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே...

ஒளியின் ஊடுருவல்

ஒளியின் ஊடுருவலில் நிழல்கள் தெரியலாம் இலைகளின் மேலே படர்ந்துள்ள அந்த நிழல்களின் முகங்களை வரைந்தவன் யார்? அழகழகான வட்டங்கள் முக்கோணங்கள் மற்றும் சதுரங்களும் சலனங்களும் எண்ணிலடங்கா பின்பங்களை வண்ணமயமாக தெறித்துச் செல்கிறதே வரைந்தவன் வரைந்துவிட்டான், காலத்தில் அவற்றை பதித்துவிட்டான் பார்ப்பவர் மனங்கள் தேன் கண்ட...

நிழலுக்கென்று ஒரு நிஜம்

தூரத்தில் பிம்பங்கள் சிறிதாகவே தெரிகிறது தன்னை நோக்கி நகரும் புள்ளியின் மையத்தில் அது தன்னைதானே பெரிதாக்கி கொள்கிறது நிழலும் அதன் பாதையில் உண்டு அதற்கு என்று நிஜமும் அதன் கைகளில் உண்டு நிழலின் அமைப்பினிலே நம் கண்களினூடு கட்சிகளை அது நிஜமாக்கிக்கொண்டே...

என்னுள்ளே என்னை தேடி

இனம்புரியாத கவலை நெஞ்சை மெதுவாக வருடுகிறது நரம்பறுந்த இரத்தப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பது போல மெல்லிய கவலை மை இருளாக என் உலகத்தை நிரப்புகிறது இதுவரை நடந்தது நன்றாக நடந்து விட்டது இனிமேலும், நடப்பது நன்றகேவே நடக்குமா மை இருட்டில்...