யுரோப்பா: உயிரைத்தேடி ஒரு பயணம்

பூமியில் இருந்து விண்வெளியை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் கடலில்லாத கோளில் அது விழுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக்குறைவு என காமடியாகக் கூறுமளவிற்கு கடந்த தசாப்தத்தில் கோள்களைப் பற்றியும், துணைக்கோள்களைப் பற்றியும் நாம்...

ஐன்ஸ்டீன் சிலுவை: ஈர்புவிசையின் விசித்திரம்

பொதுவாக விண்மீன் பேரடை ஒவ்வொன்றுக்கும் ஒரு கருவே இருக்கும். இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் பேரடைக்கு நான்கு கருக்கள் இருக்கிறதா? முதன்முதலில் இதனை அவதானித்த விண்ணியலாளர்களுக்கும் இதே சந்தேகம் தான். ஆனால் அவர்கள்...

ஈர்ப்பு: விழிப்படையும் விசை

“மேலே போனதெல்லாம் மீண்டும் கீழே வரவேண்டும்” என்கிற சொல்லாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் ஏன் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? அதற்கு விடை “ஈர்ப்புவிசை”. இரண்டு பொருட்களை ஒன்றுடன் ஒன்று நோக்கி இழுக்கும் கண்களுக்கு புலப்படாத...

பல்சார்களை சுற்றி உயிர்வாழக்கூடிய கோள்கள்?

பிறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், உயிரினம் அங்கே இருக்குமா என்கிற கேள்விக்கு பூமியின் அம்சங்களை அடிப்படையாக வைத்தே தேடலை நடாத்துகின்றனர். பொதுவாக நமது சூரியன் போன்ற ஒரு விண்மீன், அதனை சரியான...

வேகமாக வளர்ந்துவிடும் விண்மீன்கள்

இளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.

செயற்கை நுண்ணறிவு கண்டறிந்த கோள்!

இந்தக் கோளை கூகிளின் செயற்கை அறிவுகொண்ட ப்ரோக்ராமை பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர்.

ஏலியன் விண்கலமா? இல்லை விண்வெளி அகதியா? தேடல் தொடங்குகிறது

இது சுழலும் வேகத்திற்கு வெறும் பாறைகளால் ஒன்றுசேர்க்கப்பட்ட விண்கல் என்றால் சிதறியிருக்க வேண்டும். ஆனால் இதன் கட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது. எனவே நிச்சயம் உலோககட்டமைப்பை இந்த விண்கல் கொண்டிருக்கவேண்டும்.

வியாழனின் வானில் மின்னும் விளக்குகள்

வட மற்றும் தென் துருவங்களில் ஒளிர்ந்துகொண்டே அசையும் திரைச்சீலையாக இந்த ஆரோராக்கள் காணப்படும். சூரிய தொகுதில் இருக்கும் சில கோள்களில் உள்ள வானை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் எக்ஸ்-கதிர் ஆகியவற்றால் ஆரோராக்கள் நிறம் தீட்டுகின்றன. இந்தப் படத்தில் நாம் முதன் முதலாக வியாழனின் வடக்கு மற்றும் தென் துருவங்களில் ஒளிரும் ஆரோராவை பார்க்கின்றோம்.

Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா?

வெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும்.

சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி

கடந்த அக்டோபர் 19 இல் Pan-STARRS1 என்கிற தானியங்கி தொலைநோக்கி முதன் முதலாக ஒரு வான் பொருளை அவதானிக்கிறது. அதனிடம் இருந்த மென்பொருளினால் இந்தப் பொருளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக எடுத்த புகைப்படங்கள், இந்தப் பொருள் சூரியத் தொகுதிக்கு வெளியே இருந்து வந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்களை முடிவுக்கு கொண்டுவந்தது.