குவாசார் எனப்படுவது தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளின் மிகப் பிரகாசமான மையப்பகுதி எனலாம். இதன் மையத்தில் பெரும் திணிவுக் கருந்துளை ஒன்று இருப்பதுடன், இதனைச் சுற்றி தூசு/வாயுவால் உருவான தகடு போன்ற அமைப்பும் காணப்படும். கருந்துளைக்குள் விழும் தூசு/வாயு மிகப்பிரகாசமான ஒளிர்வை வெளியிடும்.