உலகின் மிகப்பழைய விலங்கு – 558 மில்லியன் வருட பழமையான படிமங்கள்

உலகின் மிகப்பழைய விலங்கு – 558 மில்லியன் வருட பழமையான படிமங்கள்

உலகின் முதலாவது உயிரினகள் எப்போது தோன்றியது என்றால் சரியாக எம்மால் அதனைக் கூறிவிட முடியாது. ஆழ்கடலின் அடியில் இருக்கும் நீர்வெப்ப துளைகளுக்கு அருகில் படிமங்களாக கிடைத்த நுண்ணுயிரினங்கள் பூமியின் ஆதிவாசிகள் என பல விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.
டைட்டானிக்கின் கதையை சைலண்டாக முடிக்கும் பக்டீரியாக்கள்

டைட்டானிக்கின் கதையை சைலண்டாக முடிக்கும் பக்டீரியாக்கள்

கடலில் மூழ்கிய எல்லாமே ஒரு கட்டத்தில் கடலோடு கடலாகிவிடவேண்டும் என்பது இயற்கையின் நியதிதான். ஏப்ரல் 15, 1912 இல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையும் அதுதான் என்பது நாமறிந்தது தான். ஆனாலும் டைட்டானிக் கப்பலின் எச்சத்தை வரலாற்றில் இருந்து எடுத்துவிட ஒரு குழு மும்முரமாக வேலை செய்கிறது!
அன்டிபயாட்டிக் மருந்துகளையே டபாய்க்கும் சுப்பர் பாக்டீரியாக்கள்

அன்டிபயாட்டிக் மருந்துகளையே டபாய்க்கும் சுப்பர் பாக்டீரியாக்கள்

நம்மை அதாவது மனிதனை அழிப்பதற்கு சக்தி பொருந்தியவன் மனிதன் மட்டுமே என்று நாம் நம்புகிறோம், அதனால் தான் அணுவாயுதம், உலகப்போர் என்பவற்றை கட்டுப்படுத்த முனைப்புக் காட்டுகிறோம், ஆனால் மரணத்தின் அரசன் இந்த இயற்கையிலே கண்களுக்கு கூட புலப்படாதளவு சிறிய நுண்ணங்கிகளில் உறங்குகிறான். அவன் எழும்பும் முன் நாம் முழித்துக்கொள்வது எமது சாமர்த்தியம் இல்லையேல் தலைக்குமேல் வெள்ளம் சான் என்ன முழம் என்ன என்கிற நிலைதான்.
யுரோப்பா: உயிரைத்தேடி ஒரு பயணம்

யுரோப்பா: உயிரைத்தேடி ஒரு பயணம்

பூமியில் இருந்து விண்வெளியை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் கடலில்லாத கோளில் அது விழுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக்குறைவு என காமடியாகக் கூறுமளவிற்கு கடந்த தசாப்தத்தில் கோள்களைப் பற்றியும், துணைக்கோள்களைப் பற்றியும் நாம் கண்டறிந்த விடையங்கள் எம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன.

பூமியின் உயிரினங்களை வடிவமைத்த தாவரங்கள்

பூமியின் உயிரினங்களை வடிவமைத்த தாவரங்கள்

உலகில் முதலில் தோன்றிய தாவரங்களும் பாங்க்ஸ் வகை உயிரினங்களும் உலக வரலாற்றில் முக்கியமான இரண்டு நிகழ்வுகளுக்கு நேரடிக்காரணமாக இருந்துள்ளது.
பூச்சி, பூச்சி, ஏலியன் பூச்சி

பூச்சி, பூச்சி, ஏலியன் பூச்சி

மியன்மார் காட்ட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆம்பரில் அகப்பட்டிருக்கும் இந்தப் பூச்சி நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து தற்போது முற்றாக அழிந்துவிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தது.
அன்னம் + பெங்குவின் + முதலை = விசித்திரமான டைனோசர்

அன்னம் + பெங்குவின் + முதலை = விசித்திரமான டைனோசர்

பாலூட்டிகள் இந்தக் கோளத்தை ஆக்கிரமிக்க முன்னர் வாழ்ந்த உயிரினங்கள் விசித்திரமானவையும், கற்பனைக்கு அப்பாற்பட்டவையுமாக காணப்பட்டுள்ளன. குட்டி டைனோசர்களை கபளீகரம் செய்த மெகா தவளைகள் தொடக்கம், 45 அடி நீளமான இறக்கை கொண்ட பறக்கும் டைனோசர்கள் வரை, அக்கால உலகம் பல புதிர்களைக் கொண்டிருந்திருக்கவேண்டும். தற்போது ஒவ்வொன்றாக நாம் அதனை மீண்டும் மீட்டிக்கொண்டு இருகின்றோம்.
பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்

பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்

பாலூட்டிகளான நாம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்காவிடினும், எமது பாலூட்டி முன்னோர்கள் ஜுராசிக் காலம்தொட்டு வாழ்ந்திருகின்றனர். இக்காலத்தில் நிலத்தை டைனோசர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அக்கால பாலூட்டிகள் சிறிய பெருச்சாளி அளவில் காணப்பட்டன – பெரும்பாலும் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்டு தங்கள் காலத்தை போக்கின. டைனோசர்களோடு போட்டி போடுமளவுக்கு அக்கால பாலூட்டிகளுக்கு வலு இருக்கவில்லை எனலாம்.
DNA வில் ஒரு கணணி வைரஸ்

DNA வில் ஒரு கணணி வைரஸ்

வாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர்.  இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே.