மின்காந்த அலைகள் ― மின்னூல்
இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.
நண்பர்களே! நீண்ட நாட்களாக செய்துவந்த முயற்சி இறுதியில் நிறைவுபெற்றுவிட்டது. சூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய வண்ணம் ஒரு மின்நூலை தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த “சூரியத்தொகுதி : ஒரு அறிமுகம்” என்னும் மின்னூல்.
சென்ற வருடத்தில் இருந்து மட்டக்களப்பு வானியல் கழகத்தில் மாணவர்களுக்கு என்னால் கற்பிக்கப்படும் சூரியத்தொகுதிக்கான அடிப்படைக் கைநூலாகவே இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது எல்லோருக்கும் பயன்படும் வண்ணம் தமிழிலும் இதனை வெளியிடுகிறேன்.