fbpx

2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்

2016 இல் மட்டும் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்  (electronic waste) உருவாகியுள்ளது. இந்தக் கழிவுகளில் இருக்கும் மூலப்பொருட்களின் மதிப்பு மட்டுமே 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

தற்போது அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. என்னடா வெப்பநிலை அதிகரித்தால் பனி உருகத்தானே வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம், தவறில்லை. ஆனால் ஏற்கனவே கூறியபடி, நமது பூமியொன்றும் அவ்வளவு எளிமையான ஒரு அமைப்பு அல்ல.

வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல்

இந்த வருடத்தில் தென் அரைக்கோளத்தில் வெப்பமான கலிபோர்னியா தொடக்கம் பனி நிறைந்த ஆர்டிக் வட்டம் வரையில் அதிகளவான காட்டுத்தீக்கள் பரவியதை நாம் பார்க்கலாம்.

கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

கடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன....

பூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்

ஆரோக்கியமான சமுத்திரம் எமது வாழ்வுக்கு அடிப்படை. எமக்கு உணவு தருவதில் தொடங்கி, குடிக்கும் நீரை சுத்திகரிப்பதற்கும், காலநிலையை பேணுவதற்கும், நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கவும் இவை உதவுகின்றன -  இப்படி பல நன்மைகளை செய்தாலும் இதற்கு எல்லாம் மேலே நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவில் பெரும்பகுதியை இவையே உற்பத்தி செய்கின்றன