நாம் எங்கிருக்கிறோம்?
நமது சூரியத் தொகுதி பால்வீதியினுள்ளே இருப்பதால் எம்மால் பால்வீதிக்கு வெளியே சென்று பால்வீதி எப்படியிருக்கும் என்று பார்க்கமுடியாது. எனவே துல்லியமான அளவீடுகள், மற்றும் பால்வீதின் கட்டமைப்புகளின் வேகம் என்பவற்றை துல்லியமாக அளப்பதன் மூலம் பால்வீதியின் முழு கட்டமைப்பை பற்றி தெரிந்துகொள்ளக் கூடியவாறு இருக்கும்.
பிரபல கருந்துளையும் அவரின் சுற்றுப்புறமும்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் முதன்முறையாக கருந்துளை ஒன்றின் படத்தை நேரடியாக பார்த்து அதிசயித்தோம். பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் M87 விண்மீன் பேரடையின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளையினை "நிகழ்வெல்லை தொலைநோக்கி" திட்டத்தின் விஞ்ஞானிகள் எமக்கு படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.
கண்களை கவரும் செக்ஸ்டன் பி விண்மீன் பேரடை
நாம் எங்கிருந்து வந்தோம், எதனால் நாம் உருவாகியுள்ளோம், இந்தப் பிரபஞ்சத்தில் வேறென்ன இருக்கின்றன என்கிற பெரும் கேளிவிகளுக்கு விடை தேடுவதால் மட்டுமே விண்ணியல் ஒரு சுவாரசியமான விஞ்ஞானம் என்று கூறிவிடமுடியாது.
ஒரு சிறப்பான குடும்ப புகைப்படம்
விண்வெளிப் புகைப்படங்கள் எல்லாமே அழகானதும், அற்புதமானதாகவும் இருப்பினும், சில குறிப்பிடத்தக்க படங்கள் சிறப்பானதாக அமைந்துவிடும். இவை அரிதான சில விடயங்களை முதன்முறையாக படத்தில் கொண்டிருக்கும்.
சூரிய பட்டொளி மீதொரு பார்வை
சூரியனின் மேற்பரப்பில் திடிரென நிகழும் வெடிப்பின் மூலம் பெரும் சூரிய பிழம்புகள் உருவாகி பில்லியன் கணக்கான துணிக்கைகளை விண்வெளி நோக்கி வீசும்.
மொசாயிக் வாணவேடிக்கை
ஒரு மொசாயிக் புதிரை தீர்க்கும் போது, அதனை முழுதாக பூரணப்படுத்தினால் மட்டுமே எம்மால் புதிரின் முழுமையான உருவத்தை அறிந்துகொள்ளமுடியும். விண்ணியலிலும் இதே நிலைதான். ஒரு விண்பொருளை பல்வேறுபட்ட மின்காந்த அலைகளில் அவதானிக்கும் போதுதான் குறித்த பொருளின் உண்மைமுகம் வெளிவரும். விண்ணியலாளர்களும் ஒரு பிரபஞ்சப் புதிரை உருவாக்கியுள்ளனர். கிட்டத்தட்ட G286.21+0.17 என வகைப்படுத்தப்பட்டுள்ள விண்மீன் கொத்து ஒன்றின் 750 அவதானிப்புகளின் தரவுகளை ஒன்று சேர்த்து அழகிய வானவேடிக்கை நிறத்தட்டுபோன்று காட்சியளிக்கும் விண்வெளிப் புதிரை உருவாக்கியுள்ளனர். அழகிற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் விண்மீன் கொத்து என்பது ஈர்ப்புவிசையால் கட்டுண்ட பெருமளவான...
பெரும் அரக்கனின் சிறப்புப் பார்வை
அண்டாரிஸ் ஒரு சிவப்பு பெரும் அரக்கன் வகை விண்மீன். பூமிக்கு மிக அருகில் இருக்கும் இவ்வகை விண்மீன் இதுதான். பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய வகை விண்மீன்களில் பெரும் சிவப்பு அரக்கன் வகை விண்மீன்களும் அடங்கும்.
இரண்டு அழகிகளின் கதை
ஹபிள் தொலைநோக்கி கோள்விண்மீன் படலங்கள் இரண்டின் அழகிய படங்களை எடுத்துள்ளது. இடப்பக்கத்தில் இருப்பது NGC 6302, இதனை பொதுவாக வண்ணத்துப்பூச்சி நெபுலா என அழைப்பர். வலப்பக்கத்தில் பூச்சி போல இருப்பது முன்னர் NGC 7072 என பெயரிடப்பட்டிருந்தது. விசித்திர பெயருக்கு காரணம் என்ன? கோள்விண்மீன் படலம் (கோள்விண்மீன் நெபுலா / planetary nebula) என அழைக்கப்பட்டாலும், இந்தப் பிரபஞ்சக் கட்டமைப்பிற்கும் கோள்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இந்தப் பிரபஞ்ச வாயு, தூசு முகில்கள் சூரியன் போன்ற ஒரு விண்மீன் தனது மேற்பரப்பு படலத்தை வெளி நோக்கி...
ஒரு பெரும் தலைமறைவு!
ஒரு மந்திரவாதியின் வித்தை காட்டும் நிகழ்வின் கடைசியில் மந்திரவாதியே மறைந்துவிடுவது போல ஒரு பெரும் விண்மீன் ஒன்று திடிரென்று மறைந்துவிட்டது!