கதிரியக்கத்தை உண்ணும் பங்கஸ்: கதிரியக்க விபத்துக்களில் இருந்து எம்மை பாதுக்காக ஒரு புதிய வழியா?
வெடித்த செர்னோபில் அணுவுலை கட்டடத்தொகுதியில் உருவாகி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வகையான பங்கஸ் (பூஞ்சை) (Cladosporium sphaerospermum) அணுக்கதிர்வீச்சை “உணவாக்கிக்” கொள்ளக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.
பிரபஞ்சத் தொல்லியல்
இந்தப் பிரபஞ்சத்தில் முதன்முதலில் உருவாகிய விண்மீன் பேரடைகள் இன்றும் விண்ணியலில் புரியாத புதிராகவே இருக்கிறது. முதன்முதலில் எப்போது, அல்லது எப்படி இந்த விண்மீன்களும் விண்மீன் பேரடைகளும் உருவாகின என்று எமக்குத் தெளிவாகத் தெரியாது.
பிரபஞ்ச மோதல்கள்
பிரபஞ்சத்தின் அளப்பரிய அளவு காரணமாக விண்வெளியில் பொருட்கள் மோதுவது என்பது அரிதான விடையம் தான். அதிலும் அரிது இப்படியான மோதலின் சுவடுகளை கண்டறிதல். அதனைதான் விண்ணியலாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது!
கட்டவிழ்த்து விடப்பட்ட சக்தி
குவாசார் எனப்படுவது தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளின் மிகப் பிரகாசமான மையப்பகுதி எனலாம். இதன் மையத்தில் பெரும் திணிவுக் கருந்துளை ஒன்று இருப்பதுடன், இதனைச் சுற்றி தூசு/வாயுவால் உருவான தகடு போன்ற அமைப்பும் காணப்படும். கருந்துளைக்குள் விழும் தூசு/வாயு மிகப்பிரகாசமான ஒளிர்வை வெளியிடும்.
வானில் ஒரு வடிவியல் புதிர்
கோள்களின் பிறப்பிடத்தின் வடிவியலைப் பற்றி படிப்பதன் மூலம் வேறுபட்ட சூழ்நிலைகளில் எப்படி கோள்கள் உருவாகின்றன என்று விண்ணியலாளர்களால் அறிந்துகொள்ள முடியும்.
சிறிய அரக்கனும் பெரிய மர்மமும்
மத்திம-திணிவுக் கருந்துளைகள் என அழைக்கப்படும் கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரத்தை NASA/EAS வின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.
தூசைக் கவ்வும் விண்மீன்கள்
கேக் செய்யும்போது மா, சீனி போன்றவை சுவையான கேக் உருவாக்க முக்கியமான சேர்மானங்களாகும். அதேபோல விண்வெளியிலும் பிரபஞ்ச தூசு விண்மீன்கள் உருவாக முக்கிய சேர்மானமாகும்.
இரும்புத் தணலென பெய்யும் மழை
சில கோடை கால மாதங்களில் நாம் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்று குறைபட்டுக்கொள்வதுண்டு. உலோகமே உருகிவிடும் அளவிற்கு நாளாந்த வெப்பநிலை கொண்ட கோள் ஒன்றில் வாழ்வதைப் பற்றி உங்களால் கற்பனை செய்யமுடியுமா?
கோழைப்பூசனமும் பிரபஞ்சமும்
இந்தப் பிரபஞ்சத்திலும் ஈர்ப்புவிசை சிக்கலான சிலந்தி வலை போன்ற கட்டமைப்பை உருவாக்கி விண்மீன் பேரடைகளையும், பேரடைக் கொத்துகளையும் ஒன்றாக பிணைத்து பல நூறு மில்லியன் ஒளியாண்டுகள் நீளமான கடபுலனாகா பாலங்களை உருவாக்கியுள்ளது.