Posted inவிண்ணியல்
நடுவில் ஒரு அரக்கன்
இந்தப் பிரபஞ்சம் பெரும்பாலும் வெறுமையானதுதான். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன், அண்ணளவாக 40 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. நாம் தற்போது வைத்திருக்கும் மிக வேகமாகச் செல்லக்கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கு செல்லவேண்டுமென்றாலும் கிட்டத்தட்ட 80,000 வருடங்கள் எடுக்கும்.