கருந்துளைகள்
கருந்துளையில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்வீச்சு

interstellar_voyage-3840x2160

கருந்துளைகள் என்பது இந்த பிரபஞ்சத்தின் அற்புத மாயாஜாலங்களில் ஒன்று! தனது மிதமிஞ்சிய ஈர்ப்புவிசையால் மற்றைய பிரபஞ்சப் பொருட்களில் இருந்து வேறுபட்டு தென்படுகிறது. இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத பண்புகளை கொண்டிருக்கும் இந்த கருந்துளைகளை எளிய தமிழில், அறிவியல் ஞானம் குறைந்தவர்களும் அறியும் வண்ணம் வெளிப்படுத்துவதே இந்த கட்டுரைத் தொகுப்பின் நோக்கம்.

கீழே ஒவ்வொரு பாகத்தின் இணைப்பையும் தந்துள்ளேன், வாசியுங்கள்! பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்த தொடர் பூரணமாக நிறைவடைந்துவிட்டவுடன், எல்லாப் பாகங்களையும் ஒன்று சேர்த்து, PDF வடிவில் கோப்பாக தருகிறேன்.

கருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்

இதில் இயற்கையில் ஈர்ப்புவிசை எப்படி இயங்குகிறது என்றும், ஈர்ப்பு விசை அதிகரிக்க எப்படியான மாற்றம் நடக்கும் என்றும் பார்க்கலாம்.


கருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்

இதில் கருந்துளை பற்றிய அறிவியல் எப்படி ஆரம்பமாகியது என்ற வரலாற்றுக் குறிப்புகளைப் பார்க்கலாம்.


கருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன?

கருந்துளைகான வரைவிலக்கணம் மற்றும் அதனைப் பற்றிய அறிமுகம்


கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு

கருந்துளைகளைப் பற்றி அறிய நாம் நட்சத்திரங்களைப் பற்றி அறியவேண்டும். இங்கே நட்சத்திரம் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.


கருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு

இங்கு நாம் நட்சத்திரங்களின் முடிவைப் பற்றிப் பார்க்கலாம். சில வகையான கருந்துளைகள் நட்சத்திரத்தின் முடிவில் தான் தோன்றும்!


கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்

இங்கு நியூட்ரான் நட்சத்திரங்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இதுவும் கருந்துளையைப் போல ஒரு விசித்திர அமைப்புத்தான். கருந்துளையைப் பற்றி அறிய இவற்றையும் அறிந்திருத்தல் அவசியம்.


கருந்துளைகள் 07 – இயற்கையை வளைக்கும் மின்காந்தப்புலம்

நியூட்ரான் நட்சத்திரங்களின் அதிகூடிய மின்காந்தப் புலத்தைப் பற்றி இங்கு பார்க்கலாம்.


கருந்துளைகள் 08 – வரலாறு மாறுமோ?

மீண்டும் அறிவியல் வரலாறு, எப்படி இயற்பியலாளர்கள் இந்த கருந்துளை சம்பந்தமான இயற்பியல் விதிகளை கண்டறிந்தனர் என்றும் பார்க்கப் போகிறோம். அதோடு சுப்ரமணியன் சந்திரசேகர் என்ற அளப்பரிய நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் எப்படி கருந்துளைக்கான விதிகளை கண்டறிந்தார் என்றும் பார்க்கலாம்!


கருந்துளைகள் 09 – நேரத்தை வளைக்கும் இயற்கை

கருந்துளைகள் எப்படி நேர ஓட்டத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்று பார்க்கலாம். வெளிநேரம் என்ற ஒரு கருத்தைப் பற்றி ஆராயலாம்.


கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா?

கருந்துளைகளை எப்படி வானியலாளர்கள் கண்டறிகின்றனர் என்றும் அதன் குணம் குறிகளைப் பற்றியும் பார்க்கலாம்.


கருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை

கருந்துளைகளின் வகைகளைப் பற்றி இங்கு பார்க்கப் போகிறோம்.


கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி

பூமிக்கு அருகில் ஏதும் கருந்துளை உண்டா, மற்றும் கருந்துளைக்கு மிக அருகில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். கருந்துளையை ராக்கெட்டில் சுற்றி வருவோமா?


கருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா?

ஒளி நேர்கோட்டில் தான் பயணிக்குமா என்ன? கருந்துளை என்னும் அரக்கன் ஒளியையும் வளைப்பானே! எப்படி என்று பார்க்கலாம்.


கருந்துளைகள் 14 – சுற்றியிருக்கும் அரக்கன்

கருந்துளையை நெருங்கும் போது என்னமாதிரியான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று பார்க்காலாம். மின்காந்த அலைகளை எப்படி ஈர்ப்புவிசை விரிக்கிறது என்றும் அறியலாம்.