ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி

பதினாறாம் நூற்றாண்டு வரை நாம் வான் பொருட்களை வெறும் புள்ளிகளாக பார்க்கவேண்டி இருந்தது, கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை உருவாக்கும் வரை. அதன் பின்னரே எம்மால் சந்திரனில் இருந்த மலைகளையும், வியாழனின் துணைக்கோள்களையும், சனியின் வளையங்களையும் பார்க்க முடிந்தது. அதுவரை பூமியைச் சுற்றி சூரியன் உட்பட எல்லா வான் பொருட்களும் சுற்றிவருகின்றன என்ற கருத்தை தொலைநோக்கியின் மூலமான அவதானிப்பு மூலம் அதன் பின்னர் வந்த பல வானியலாளர்கள் உடைத்தெறிந்தனர்.

இதனால் தான் என்னவோ, தொலைநோக்கியை கண்டறிந்த கலிலியை நவீன விண்ணியலின் தந்தை என்று கூட அழைக்கின்றனர்.

அதன் பின்னர் தொலைநோக்கிகளின் அளவும் பெரிதாக பெரிதாக எம்மால் பல்வேறுபட்ட ஆழமான விண்வெளிப் பொருட்களை பார்க்க முடிந்தது. அதிலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இந்த ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி.

சாதரணமாக தொலைநோக்கிகள் பூமியில் நிர்மாணிக்கப்படும். ஆனால் இந்த ஹபிள் தொலைநோக்கி பூமியின் நிலமட்டத்தில் இருந்து அண்ணளவாக 550 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிவந்துகொண்டே விண்வெளியில் உள்ள பல பொருட்களையும் ஆய்வுசெய்கிறது.

  1. ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1

  2. ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2

  3. ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3