1] வேற்றுக்கிரக நாகரீகங்கள்

டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன்.

இந்தக் கட்டுரைத் தொகுப்பில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எப்படி நாகரீகமானது வளர்ந்து செல்லும் என்றும், அறிவியல் ரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்ளும் என்றும் பார்க்கலாம்.

பல்வேறு கோள்களில் குடியேறுதல், உடுக்களுகிடையில் பயணித்தல், பாரியளவு சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பிரபஞ்ச அழிவில் இருந்து தப்பிக்க முடியுமா என ஆராய்தல் என பல்வேறுபட்ட விடயங்களை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.

PDF கோப்பாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


2] சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்

சூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய வண்ணம் ஒரு மின்நூலை தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த “சூரியத்தொகுதி : ஒரு அறிமுகம்” என்னும் மின்னூல்.

சென்ற வருடத்தில் இருந்து மட்டக்களப்பு வானியல் கழகத்தில் மாணவர்களுக்கு என்னால் கற்பிக்கப்படும் சூரியத்தொகுதிக்கான அடிப்படைக் கைநூலாகவே இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது எல்லோருக்கும் பயன்படும் வண்ணம்  தமிழிலும் இதனை வெளியிடுகிறேன்.

PDF கோப்பாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். (6.5 MB)


3] மின்காந்த அலைகள்

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. விண்வெளியில் சஞ்சரிக்கும் செயற்கைக்கோள்கள் தொடக்கம், உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைகளில் எடுக்கப்படும் எக்ஸ்ரே வரை எல்லாமே மின்காந்தஅலைகளால் எதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்தப்படுகின்றது. அப்படியான இந்த மின்காந்த அலைகள் என்றால் என்ன? எங்கிருந்து அவை வருகின்றது, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதில் இருக்கும் வேறுபட்ட அலைக்கற்றைகளின் பண்புகளையும் பார்க்கலாம்.

PDF கோப்பாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.