பரிமாணம், சஞ்சிகை உலகிற்கு ஒரு புதிய சொல்லாக இருக்கலாம், பரிமாணம் என்றால் அளவீடு, பருமன், வேறொரு பார்வை அல்லது கோணம் என்று அகராதி விளக்கம் தருகிறது. இதுதான் எனது நோக்கமும், ஒரு புதிய முயற்சி, ஏனைய இணைய இதழ்களைப் போலலாமல், தமிழில் எழுத ஒரு முயற்சி.

முதலில் நண்பர் அமர்நாத் உடன் சேர்ந்து பல்வேறு பட்ட விடயங்களையும் பகிரும் ஒரு மேடையாகத்தான் இந்தப் பரிமாணம் தொடங்கியது. பல்வேறு பட்ட வேலைப்பளு காரணமாக அவரால் தொடர்ந்து எழுதமுடியவில்லை. எனக்கு நன்றாக எழுதவந்ததெல்லாம் அறிவியல் சம்பந்தமானவையே! ஆகவே தற்போது பரிமாணம் என்றால் அறிவியல் என்று ஆகிவிட்டது.

அறிவியல் கட்டுரைகள் மட்டுமல்லாது, அறிவியல் கதைகள் கூட எழுதிப் பார்க்கிறேன், அத்தோடு சில கவிதைகளும்!

முடிந்த மட்டும் இலக்கணப்பிழை இன்றி எழுத, எழுதியவற்றை சரிபார்க்க முனைகின்றேன், அப்படி இருந்தும் மேலதிகமாக எதாவது எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால், அவற்றை சுட்டிக்காட்டவும் நீங்கள் தயங்க வேண்டாம்.

தரமான எழுத்துக்கும் படைப்பிற்கும் உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பயணம் தொடங்குகிறது.

நன்றி

சிறி சரவணா (https://www.facebook.com/saravana.muthaly)