மின்காந்த அலைகள்

308409906_e6a6180037_b_cr

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. விண்வெளியில் சஞ்சரிக்கும் செயற்கைக்கோள்கள் தொடக்கம்,  உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைகளில் எடுக்கப்படும் எக்ஸ்ரே வரை எல்லாமே மின்காந்தஅலைகளால் எதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்தப்படுகின்றது. அப்படியான இந்த மின்காந்த அலைகள் என்றால் என்ன? எங்கிருந்து அவை வருகின்றது, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதில் இருக்கும் வேறுபட்ட  அலைக்கற்றைகளின் பண்புகளையும் பார்க்கலாம்.

மின்காந்த அலைகள் 1 : அறிமுகம்

முதலில் அலைகள் என்றால் என்ன என்று பார்க்கலாம். அலைகளில் இரண்டுவகை உண்டு. பொதுவாக நீங்கள் அலைகளைப் பார்த்திருப்பீர்கள். கடலலைகள் ஒரு உதாரணம். நீரில் கல்லொன்றை விட்டெறியும்போது, அந்த நீர் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களும் அலைகளே, அதேபோல நாம் பேசும்போது வரும் ஒலி, அதுவும் அலைகளே, காற்றினூடு அவை பயணிக்கின்றன…

மேலும் வாசிக்க…


மின்காந்த அலைகள் 2 : பண்புகள்

மின்காந்தஅலைகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன என்று பார்த்தோம் இல்லையா? நுண்ணலை, ரேடியோஅலை, அகச்சிவப்புக்கதிர், ஒளி, புறவூதாக்கதிர், எக்ஸ்கதிர் மற்றும் காமாக்கதிர்… இப்படி பலவகை இருந்தாலும், இவை எல்லாமே ஒரே வகையில்த்தான் நடத்தைகளைக் காட்டுகின்றன…

மேலும் வாசிக்க…


மின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்

இந்தப் பாகத்தில் மின்காந்த அலைகளின் நிறமாலையில் (spectrum) இருக்கும் மிகப்பெரிய அலையான ரேடியோ அலைகளைப் பற்றிப் பார்க்கலாம். மிகப்பெரியது என்று சொல்லக்காரணம் அதனது அலைநீளம். ரேடியோ அலையின் நீளமானது ஒரு மில்லிமீட்டர் தொடக்கம் 100 கிமீ வரை செல்கிறது…

மேலும் வாசிக்க…


மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்

நுண்ணலைகள், ரேடியோஅலைகளை விட அலைநீளம் குறைந்தவை, அதாவது ரேடியோ அலைகளின் அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து வரும்போது, அது ஒரு கட்டத்தில் நுண்ணலைகளாக மாறிவிடும். இது ரேடியோ அலைகளின் அலைநீளத்திற்கு மிக அருகில் இருந்தாலும் தனியான அலைக்கற்றை வடிவமாகவே கருதப்பட்டு, நுண்ணலை என்று பெயரிடப்பட்டுள்ளது…

மேலும் வாசிக்க…


மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்

அகச்சிவப்புக் கதிர்கள் நுண்ணலைகளை விட அலைநீளம் குறைந்த அலைகளாகும். மனிதக் கண்களால் பார்க்க முடியாத இந்த அலைகள் கண்டறியப்பட்ட விதமே சற்று விசித்திரமானது. இந்த அலைகளுக்கு “அகச்சிவப்பு” என பெயர் வரக்காரணம், இந்த அலைகள், கட்புலனாகும் அலைகளின் சிவப்பு நிற அலைகளுக்கு அப்பால் இருப்பதாலாகும்.

மேலும் வாசிக்க…


மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி

மின்காந்த அலைகள் எல்லாமே ஒளிதான், ஆனால் மொத்த மின்காந்த அலைகளின் நிறமாலையில் மிகச் சிறிய அளவையே எமது கண்களால் உணர முடியும், மின்காந்த அலைகளின் இந்தப் பகுதியே கட்புலனாகும் ஒளி, அல்லது வெள்ளொளி என அழைக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க…


மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்

புறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. மனிதக் கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலையாக இருப்பினும் சில பூச்சிகள், பறவைகள் மற்றும் தேனிக்களால் இவற்றை பார்க்க அல்லது உணரமுடியும். மேலும் குறிப்பிட்ட சூழலில் குழந்தைகளால் அல்லது இளம் மனிதர்களால் கூட புறவூதாக் கதிர்களை பார்க்கக்கூடியதாக இருக்கும்.

மேலும் வாசிக்க…


மின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்

எக்ஸ் கதிர்கள், அல்லது கதிர்வீச்சு, புறவூதாக் கதிர்களைவிட அலைநீளம் குறைந்த மின்காந்த அலை/ கதிர்வீச்சாகும். பொதுவாக இதனது அலைநீளம் மிக மிகச் சிறியதாக இருப்பதால் எக்ஸ் கதிர்வீச்சை அதன் அலைநீளத்தில் அளக்காமல், அது கொண்டிருக்கும் சக்தியின் அடிப்படையில் அளக்கின்றனர். இதற்குக் காரணம், எக்ஸ் கதிரின் அலைநீளம் 0.03 நனோ மீட்டார் தொடக்கம் 3 நனோ மீட்டர்கள் வரை இருப்பதே! இந்த அலைநீளம் பல மூலகங்களின் அணுக்களை விடச் சிறியதாகும்.

மேலும் வாசிக்க…


மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்

மின்காந்த அலைகளிலேயே மிகவும் குறுகிய அலைநீளம் கொண்ட மின்காந்த அலை காமா அலையாகும். இதன் அலைநீளம் பொதுவாக 10 பிக்கோமீட்டரை விடக் குறைவாகும். ஒரு பிக்கோமீட்டார் என்பது ஒரு மீற்றரில் ஒரு ட்ரில்லியனில் ஒரு பங்கு ஆகும்! இது பொதுவாக அணுவின் விட்டத்தைவிடக் குறைவான நீளமாகும்.

மேலும் வாசிக்க…