வாசிப்பு முக்கியம்
எழுதியது: சிறி சரவணா
நாம் நிச்சயமாக இளைய சமுதாயத்திற்கு வாசிப்பின் மகத்துவத்தை கற்றுக் கொடுக்கவேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை செதுக்குவதில் வாசிப்பு என்பது நிச்சயம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது எனது கருத்து. வாசிப்பு மட்டும் தான் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று இங்கே நன் சொல்லவரவில்லை, மாறாக, வாசிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கை ஒருவரது வாழ்வில் செலுத்தியே தீரும்.
வாழ்க்கை என்றால் என்ன? ஒரு சவாலான கேள்விதான்! அதற்கு பதிலளிப்பது அல்ல எனது நோக்கம்; ஏன் இந்த கேள்வி? வருகிறேன் விசயத்திற்கு! வாழ்க்கை என்ற ஒன்றை நாம் வாழ்வதில்லை. “நாம் வாழ்கையை வாழ்கிறோம்” என்று சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அப்படிச் சொல்லிவிட்டால், வாழ்க்கை என்பது நம்மை விட்டு தனிப்பட்ட வஸ்து ஆகிவிடுகிறது அல்லவா? நாம் ரயிலில் பயணிப்பது போல – ரயிலும் நாமும் ஒன்றல்லவே. ஆக நான் வாழ்வை அப்படி பார்க்கவில்லை.
யதார்த்த வாழ்வில் மது – பாகம் 03
எழுதியது: முருகேசு தவராஜா
இந்நாட்டிலே, சாதாரண வகையைச் சேர்ந்த சாராயம் அதிகளவு விற்பனையாகும் பிரதேசத்தில் மட்டக்களப்பும், மன்னாரும் முன்னிலையில் உள்ளன. இது பற்றிய தகவல்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
பஞ்சமா பாதகங்களையுப் பக்குவப்படுத்திய பழச்சாறு போன்று ஆக்கி அனுபவித்த சில அரசிகள், மனித இரத்தத்தில் குளித்துக் களித்ததாயும், இவ் அழகிகள் பாலிலே குளித்து குதூகலித்ததாகவும் செய்திகளை நாம் படிக்கின்றோம். அது விரலிற்கு தகுந்த வீக்கமாகவும் கொள்ளப்படுகிறது. இங்கு யதார்த்த வாழ்வின் சில அம்சங்கள் தொட்டுச் செல்லப்பட்டன.
யதார்த்த வாழ்வில் மது – பாகம் 02
அடிநிலை மக்களின் கொள்ளளவு தனியொரு குடும்பத்தைப் பொறுத்து மிகச் சிறிதாய் இருப்பினும், உலகலாவிய ரீதியில் அவர்களின் தொகை பெரிய அளவில் இருப்பது தவிர்க முடியாததொன்றாகவே உள்ளது. அண்மையில் பகிர்ந்து கொண்ட இரு சம்பவங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருந்தி வரும் எனக் கருதலாம்.
(வைத்தியசாலையில் ஒரு மாத காலம் தங்கி சிகிச்சை பெற்ற நண்பர் மூலம் கிடைத்த தகவல்)
யதார்த்த வாழ்வில் மது – பாகம் 01
மனித வாழ்வே மயக்கமுடையது. அதிலே மதுவும் சேர்ந்துவிட்டால், அது மாபெரும் நரகமேயாகும். மனிதன், ஒரு புறத்தில் கடந்த காலங்களின் சலனங்களையும், எதிர்கால ஏக்கங்களையும் எந்நேரமும் மனதில் சுமந்துகொண்டு பகல்நேரச் சிறையிலே வாழ்கின்றான். மறுபுறத்தில் நிறைவேறா எண்ணங்களின் படிமங்களை நித்திரையில் கனவாகக் கண்டு கற்பனையில் மிதந்து கொண்டு குழம்பிய நிலையில் வாழ்கின்றான். உண்மையிலே இவ்வாறான வாழ்வு வாழ்வல்ல.
விபுலாநந்தம் – தெய்வீகம்
காரேறுமூதூர்க் களக்கொழுந்தே, நாம் வாழும் கிழக்குதித்த ஞான சூரியனே உலகிற்கு தமிழ் ஒளி பரப்ப இங்குதித்த உத்தமனே வாழ்க.
குழந்தைப் புலவனாக, ஈழத்தின் முதல் தமிழ் பண்டிதனாக பயிற்றப்பட்ட ஆசிரியனாக, விஞ்ஞான பட்டதாரியாக, பன்மொழி புலவனாக மூவாசையும் துறந்தோனாக, ஆராய்வளனாக, தமிழர் மனதிலெல்லாம் பதிந்த அறிஞர்க்கு அறிஞனாக நமது முதுசமாக தமிழ் முனிவனாக, எவ்வாறு உயர்ந்தான் விபுலாநந்தன் எனும் பேராசான். அது திருவருளே அன்றி வேறில்லை.
“மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….”
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”(இல்வாழ்க்கை-50) என்ற குறள் பாவானது “நாம் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்.” என்பதை வலியுறுத்துகின்றது. இதையே எமது சான்றோர் “பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழுங்கள் என்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும் இதுவே. அதாவது நாமும் வாழ்ந்து, நம்மைச் சேர்ந்த அனைவரையும் வாழவைப்போம் என்பதாகும். இதுவே சிறந்த மனிதத்துவமாகவும் கருதப்படுகின்றது.
1935 நத்தார்
பேடன்வெய்லருக்கு மீண்டும் வந்து, முன்னர் நான் ஈடுபட்டிருந்த கருமங்களைத் தொடர்ந்தேன். நத்தார் அணுகிக் கொண்டிருந்த வேளையில் கமலாவின் நிலையில் வீழ்ச்சி தொடங்கியது. மீண்டும் நெருக்கடி. அவளுடைய வாழ்வினை உண்மையிலேயே பயம் ஊசலாடியது. 1935ன் அந்தக் கடைசி நாட்களிலே வெண்பனி படந்திருந்த காலத்திலே என்ன செய்வதென்று தெரியாமலும், எத்தனை நாட்கள் அவள் உயிருடன் இருப்பாள் என்று தெரியாமலும் தவித்துக் கொண்டிருந்தேன்.
சினிமாவும் சமுதாயமும்!
இன்று நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருகின்றோம். வேகமாக நகர்ந்துவரும் வாழ்க்கை ஒரு பக்கம் என்றாலும், வாழ்வியல் நிகழ்வுகளில் எமது பங்களிப்பின் வீதம் மிகச்சரியாக குறைந்துகொண்டே செல்கிறது. எதிலும் ஒரு பொறுப்பற்ற தன்மையை காணக்கூடியதாக இருகின்றது, ஒரே ஒரு விடயத்தை தவிர, அதான் சினிமா.