அடிநிலை மக்களின் கொள்ளளவு தனியொரு குடும்பத்தைப் பொறுத்து மிகச் சிறிதாய் இருப்பினும், உலகலாவிய ரீதியில் அவர்களின் தொகை பெரிய அளவில் இருப்பது தவிர்க முடியாததொன்றாகவே உள்ளது. அண்மையில் பகிர்ந்து கொண்ட இரு சம்பவங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருந்தி வரும் எனக் கருதலாம்.
(வைத்தியசாலையில் ஒரு மாத காலம் தங்கி சிகிச்சை பெற்ற நண்பர் மூலம் கிடைத்த தகவல்)
ஒரு கிராம வலைஞன் (மீன்பிடிப்பவர்) குளத்திலே வலைவீசிக் கொண்டிருந்த போது ஒரு பனையான் மீன் அவனுடைய புறக்பக்க வலையில் மாட்டிக் கொண்டது. அதை எடுத்து அவசரத்தில் அதன் வாய்ப் புறத்தை தனது வாயில் கௌவியபடி ஏனைய மீன்களை பக்குவமாக வலையுள் படியவைக்கும் முயற்சியில் இவன் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் அப்பனையான் மீன் அவனுடைய தொண்டையை நோக்கி நீச்சலடித்து விட்டது. இன்னுமொரு விவசாயக்கூலி வயலுக்குள் நாள் முழுவதும் கிருமிநாசினி விசிறிவிட்டு வாய்க்காலில் குளித்த போது அட்டையொன்று அவரது ஆண்குறிக்குள் புகுந்து கொண்;டது. முதலாம் ஆளுக்கு தொண்டை பிளக்கப்பட்ட போது மீன் குளிர்சாதனப் பெட்டியுள் இருப்பதைப் போல் வெளிறியிருந்தது. இரண்டாமவனுக்கு அடி வயிற்றில் ஓட்டையிடப்பட்டு சிறுநீர் வெளியேறற்றப்பட்டதாம். இப்படியாக, அடிநிலை மக்களின் வாழ்வியல் அனுபவங்களும், திண்ணைக் கதைகளும் சிறப்பானவைதான்.
இந்தவகையில் மற்றுமொரு சம்பவத்தை வாசகர்களிற்கு சொல்வது பொருத்தமாயிருக்கும் என நினைக்கின்றேன்.
அழுகிய பிணம் ஒன்றின் பகுதிகளைத் தோண்டியெடுக்கும் கூலித் தொழிலாளி ஒரு அரசாங்க ஊழியனாக இருந்தும் அந்தக் காட்சியினை விபரமாக்கும் நீதிபதியின் முன்னால் அவன் நிறைபோதையில் ராஜகாரியத்தை நிறைவேற்றினால் அந்த ஊழியனை தண்டிப்பாரா? நீங்களே தீர்மானியுங்கள். இங்கு அடிநிலை மக்களிற்கு என்றே சில தீர்வுகள் எழுதாச் சட்டங்களாக அமைந்து கிடப்பதை நீங்களே ஊகிக்கலாம். வீடுகளின் மலக்கிடங்குகளைச் சுத்திகரிக்கும் தொழிலாளிகள், பிணங்களோடு சஞ்சரிக்கும் தொழிலாளிகள் என்ற ஏகப்பட்ட தொழிலாளிகளிற்கு மட்டும் இச்சமூகம் இச்செயலிற்கு அனுமதி வழங்கவில்லை. உல்லாசப்பயண கவர்ச்சி மையங்களில், உப்பரிகைகளில் பெருமட்டக் குடிகளுக்கும் சமூகம் அனுமதி தந்துள்ளது.
ஆனாலும் நாளாந்தம் வீதிகளில் தெரு நாய்கள் முகர்ந்து பார்த்து, பன்னீர் தெளிக்கும் அளவிற்கு நிலைகுலைந்து; சில வேளைகளில் நிர்வாணமாய் வீழ்ந்து கிடக்கும் ஏழையைப் பார்த்து, காறி உமிழ்பவன் கூட இரவில் முடாக்குடியனாக இருக்கலாம். இதுதான் யதார்த்தம்.
பெருமட்டச் சமூக உறுப்பினர்கள் வீதியில் வீழ்ந்து கிடப்பது அரிதே. ஆனாலும் ஏழையின் மூளையில் மதுசாரம் செய்யும் வேலையைத்தான் உயர் சமூகத்தினரின் மூளையிலும் செய்கிறது. அவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்து குடிப்பதால், அவர்களது குடி, ஆளுமை மிக்க அழகியல் ஆகின்றது. ஏழையோ!, “குடிகாரனாக” முத்திரை குத்தப்படுகின்றான். உலகின் உத்தமர்களில் ஒருவரான மகாத்மா காந்தி அவர்கள் தனது அகிம்சைக் கொள்ளையினால் பிரபலமானவர். இவர் கறுப்பினத் தந்தையர்களில் ஒருவரான மாட்டின்லுதர் கிங் அவர்களுக்கே குருவானவர். ஆனால் காந்தியின் மகனோ மிகுந்த மது போதையில் வீதியில் வீழ்ந்து கிடந்தாராம், எனப் பத்திரிகைகள் சொல்கின்றன.
பறக்கும் விமானங்களில், மிதக்கும் கப்பல்களில், நட்சத்திர ஹோட்டல்களில், இரவு விடுதிகளில், சூதாட்ட நிலையங்களில், தவறணைகளில், பார்களில், காடுகளில், வீதிகளில், வீடுகளில் என்று வசதிக்கு ஏற்றாற் போல் சகலமட்ட மக்களையும் சென்றடையும் விதத்தில் விற்பனை செய்யப்படும் மாபெரும் விற்பனைப்பண்டமே மதுவாகும்.
வைன், விஸ்கி, பிறண்டி, ஜின், பியர், கால்ஸ்பக், சாராயம், கள் என்று பல பெயர்களிலும் பல தினுசுகளிலும் தகுதிக்கு ஏற்றாற் போல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பது மது. வணக்கச் செயற்பாடுகளிலும்; வாழ்வு, சாவு வைபவங்களிலும் மருந்தாகவும் விருந்தாகவும் மட்டுமல்லஇ தொழிலை ஆரம்பித்து வைத்தல்;, முடித்து வைத்தல்; செயற்பாடுகளைத் திட்டமிடல்இ உடல் உளச் சோர்வு நீக்கி, தொழில் ஊக்கி, பயம் நீக்கியாக மட்டுமல்ல, ஏனைய பாவங்களின் தொடர் செயற்பாடுகளிற்கு மூல ஊடகமாகவும்; வெற்றிக் களிப்பு, நட்பு முறிவு (Bachelor Party) எனக் குறிப்பிடக் காரணம். முதல் நாள் விடிய விடிய குடிக்கும் நண்பர்களில் அனேகர் திருமண வைபவத்தில் தாலி கட்டும் நேரத்தில் காணப்படுவதில்லை. ஆனால் மாப்பிள்ளை சோர்ந்திருந்தாலும் சேர்ந்திருக்க வேண்டும் அல்லவா? போதைப் பரீட்சை என்று ஏகப்பட்ட களவடிவங்களைக் கொண்டது மது. களமும், வளமும், தோதான சூழலும் தோற்றம் பெறும் போது ஆளுக்குத் தகுந்தாற் போல் அரங்கேற்றம் இலகுவாகும்.
உத்தமர் எனத் தங்களைக் காட்சிப்படுத்தும் உயர்ந்த சமூகத்தினருக்கு இறக்குமதிக் கோட்டா, அரசு ஆதரவு பெற்றவருக்கு மதுபானைச் சாலைகளிற்கான அனுமதிப்பத்திரம் என நிதிப்பாய்ச்சலின் வாய்க்கால் மது. ”கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கண்டு, எள்ளானாளும் எழுவர்க்கு அளி.” என்பது எளிய வாக்கியங்கள் தான். காலம் மாறிவிட்டது.
உலகு தனது செயற்பாட்டின் உச்சிக்கு வந்துவிட்டது. இரண்டாயிரத்து பன்னிரெண்டில் உலகம் அழியப் போகுறது, இங்கு எதற்கு ஒழுக்க மேம்பாடு கூடிக்குடி, கூத்தாடி, கூத்திபிடி என்பனவும் புதிய வாக்கியங்களாகப் பிறந்துள்ளன. ஆனாலும் பழைமையான வாக்கியங்கள் இவ்வாறு கூறுகின்றன. “துஸ்ட அனுக்கிரக சிஸ்ட பரிபாரலனம்”, சாம, பேத, தான, தண்டம்; பிரளயம் வந்தால் பனையான்மீன் பனம்பூ சாப்பிடும். அவை மட்டுமல்ல பால் வீதியில் உள்ள கருமையிடத்தில் ஒரு நாள் இப்புவி புகுந்துவிடும் எனும் ஊகமும் உண்டு. கலியுகத்தின் கடைசிக் காலத்தில் நெருப்பு மழை பொழியும். ஆனாலும் மறுயுகத்திற்கென சில மனிதர்கள் எச்சமாவார்கள் என்பனவெல்லாம், அறிவியல் ரீதியாக சிந்திப்பவருக்கு புதியவை அல்ல.
எடுத்துவிடுவது ஞானியின் வேலை, எடுக்கும் போதெல்லாம் கடித்து விடுவது எறும்பின் வேலை. இது அறிவிலிகளுக்கு அறிவாளி சொன்ன கதை. இதேபோன்று “உனக்கல்லடி உபதேசம் ஊருக்கடி” என்ற அறிவியல் போதனையும் இங்குண்டு.