உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்
இன்று உலகில் இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று e-waste எனப்படும் இலத்திரனியல் குப்பைகள். அண்ணளவாக 70% மான பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களும் பாகங்களும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதுவரை 41.8 மில்லியன் தொன் அளவு இலத்திரனியல் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை ஆக்கிரமித்து உள்ளன. இது நிலப்பரப்பு சம்மந்தமான பிரச்சினை மட்டுமல்ல, இந்த குப்பைகள், முக ஆபத்தான விஷரசாயனங்களை சிறிது சிறிதாக நிலத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறது, இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சூழல் மற்றும் சுகாதாரப்பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடும்.
இதற்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடிக்கும் விதமாக அமெரிக்க ஆய்வாளர்கள், வினைத்திறனுடன் தொழிற்படும் கணணி சிப்களை வெறும் மரத்தினால் தயாரித்துள்ளனர். அதாவது கணணி சிப்களில் பெரும்பாலான பகுதி, அதன் வடிவத்தையும், அதன் உறுதியையும் பேணும் கட்டமைப்பாகும், இந்தக் கட்டமைப்பையே ஆய்வாளர்கள் மரத்தினைப் பயன்படுத்தி உருவாகியுள்ளனர், மற்றைய தொழிற்ப்பாட்டுப்பகுதி வெறும் சில மைக்ரோமீட்டர்களே!