டைட்டான் கிளப்பும் மணற்புயல்

டைட்டான் கிளப்பும் மணற்புயல்

கொஞ்ச காலத்திற்கு முன்புவரை புழுதிப்புயல் என்பது பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களில் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம். தற்போதைய புதிய தரவுகள் சனியின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டானில் கூட புழுதிப்புயல் உருவாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில் இருக்கும் அடுத்த முக்கிய விடையம் என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது 2017 இல் சனியுடன் மோதி தனது வாழ்வை முடித்துக்கொண்ட காசினி விண்கலமாகும்.
சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்

சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்

சூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர் என்பது அரிதாகக் காணப்படும் ஒரு வஸ்து என்றே கூறிவிடலாம்.