Posted inவாழ்வியல்
தீ மிதிப்பு
பாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில் ஆர்வம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் அதில் பங்கு கொண்ட பொழுது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்றாவது வருடம் என்னுடைய நண்பரும் இணைந்து கொண்டார்.