Posted inசூழல் தொழில்நுட்பம்
சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது! கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.