supermoon

பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்

சுப்பர் நிலவு என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையைப் போலவே பூமியைச் சுற்றிவரும் நிலவின் பாதையும் நீள்வட்டமானதே. இப்படியாக பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது, பூமிக்கு மிக அருகில் வரும் ஒரு சந்தர்ப்பமும், அதேபோல பூமியில் இருந்து தொலைவிற்கு செல்லக்கூடிய சந்தப்பமும் நிலவுக்கு ஏற்படும்.