அண்டார்டிக்கா தொலைத்த மூன்று ட்ரில்லியன் தொன் பனி

அண்டார்டிக்கா தொலைத்த மூன்று ட்ரில்லியன் தொன் பனி

காலநிலை மாற்றம் வேகமாக புவியின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருவதை நாம் உணர்கிறோம். இதில் குறிப்பாக மிக மோசமாக தாக்கப்படுவது பூமியின் துருவங்களில் இருக்கும் பனிப்பாறைகளே. புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பால் வருடத்திற்கு 200 பில்லியன் டன் என்கிற வீதத்தில் அண்டார்டிக்காவின் பனி கரைகிறது!
அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

தற்போது அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. என்னடா வெப்பநிலை அதிகரித்தால் பனி உருகத்தானே வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம், தவறில்லை. ஆனால் ஏற்கனவே கூறியபடி, நமது பூமியொன்றும் அவ்வளவு எளிமையான ஒரு அமைப்பு அல்ல.