புளுட்டோ ஒரு பார்வை

புளுட்டோ ஒரு பார்வை

நமது நிலவை விடச் சிறியதான புளுட்டோவிற்கு ஐந்து துணைக்கோள்கள் உண்டு. அதில் பெரியது சாரோன். இதில் காமடி என்னவென்றால் சாரோன் அண்ணளவாக புளுட்டோவின் அளவில் பாதி இருக்கும்!
செவ்வாயில் கடலா?

செவ்வாயில் கடலா?

செவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர் அளவு ஆழத்திற்கு நிரப்பக்கூடியளவு நீர். இப்போது இல்லை, பெரும்பாலும் எல்லாம் விண்வெளிக்கு போய்விட்டது. செவ்வாய் இப்போது ஒரு பாலைவனம் தான்.