சனியின் துணைக்கோள் என்சிலாடஸிசில் உயிரின் எச்சம்

சனியின் துணைக்கோள் என்சிலாடஸிசில் உயிரின் எச்சம்

நீண்ட நாட்களாகவே பல விண்ணியலாளர்களும் விஞ்ஞானிகளும், சனியையும் வியாழனையும் சுற்றிவரும் துணைக்கோள்களில் திரவநிலையில் நீர் இருக்கும் என்றும் அதில் உயிர்கள் தோன்றி இருக்க வாய்ப்பு மிக அதிகம் என்றும் கருதினர். அதிலும் குறிப்பாக என்சிலாடஸ் முதன்மை பெறக்காரணம், அதில் நாம் நேரடியாக அவதானித்த திரவநிலை நீர்.
சனி, பாதுகாப்பு கவசம் மற்றும் சூரியப் புயல்

சனி, பாதுகாப்பு கவசம் மற்றும் சூரியப் புயல்

ஒவ்வொரு நாளும் நமது சூரியன் சூரியத் தொகுதியை நோக்கி மில்லியன் கணக்கான தொன் எடையுள்ள அதி சக்தி வாய்ந்த சூப்பர் ஹாட் துணிக்கைகளை செக்கனுக்கு 500 கிமீ வேகத்தில் (தோட்டாவின் வேகத்தைப் போல 1000 மடங்கு) தெளித்துக்கொண்டே இருக்கிறது!
கசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்

கசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்

1997 இல் பிரமாண்டமாக சனியை நோக்கி விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் கசினி. அன்றிலிருந்து இன்றுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் கசினி திட்டமும் உள்ளடங்கும்.
சனியின் வளையங்கள் புதியது

சனியின் வளையங்கள் புதியது

பூமியில் டைனோசர்கள் உலாவிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இந்த வளையங்கள் சனியைச் சுற்றி உருவாகியிருக்கவேண்டும் என்பது இவர்கள் முடிவு - டைனோசர்களிடம் பாரிய தொலைக்காட்டிகள் இருந்திருந்தால், இந்த அழகிய பிரமாண்ட நிகழ்வை அவர்கள் பார்த்திருக்கலாம்!

சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் – தேடலுக்கு ஒரு புதிய இடம்

எழுதியது: சிறி சரவணா

சில வருடங்களுக்கு முன் நாசாவின் விண்கலமான கசினி, சனியின் துணைக்கோளான என்சிலாடசில் வெப்பநீர் இயக்கம் இருப்பதற்கான தடயத்தைக் கண்டறிந்தது. பூமியின் ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் மாற்றங்களைப் போல இந்தத் துணைக்கோளிலும் இடம்பெறும் மாற்றங்களை அவதானிக்கும் போது, வேறு கோள்களில், எப்படி இந்த மாற்றங்கள், அந்தக் கோள்களின் பௌதீக அமைப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்றும் அறியலாம்.

நாசாவின் விண்வெளிவீரர் ஜான் க்ரன்ஸ்பில்ட், இந்த என்சிலாடஸ் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.

“என்சிலாடசில், கசினி கண்டறிந்த நீர் சார்ந்த செயற்பாடு, இந்தக் கோளின் மேற்பரப்புக்குக் கீழ் பெரிய கடல் இருப்பதற்கும், அங்குப் புவியியல் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கும், அதுமட்டுமல்லாது அங்கு உயிரினம் உருவாகத் தேவையான காரணிகளும் இருக்கலாம். இந்தச் சூரியத் தொகுதியில், உயிர் வாழவே முடியாது என்று கருதும் இடங்களில், இப்படியான செயற்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருப்பது, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே தனியாகவா இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை அளிப்பதற்கான சந்தர்பத்தை உருவாகுகிறது”.