மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்

மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்

எழுதியது: சிறி சரவணா

2004 இல் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட மெசெஞ்சர் (MESSENGER) விண்கலம் புதனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட ரோபோ விண்கலமாகும். புதனை சுற்றிவந்து ஆய்வு செய்த முதலாவது விண்கலமும் இதுதான். 485 kg எடை கொண்ட மெசெஞ்சர், 2011 இல் புதனை சுற்றத்தொடங்கியது. புதனைப் பற்றிய பல்வேறு அதிசயிக்கத் தக்க தகவல்களை இது நமக்கு தெரிவித்தது.

இன்னும் சில நாட்களில் மெசெஞ்சர் விண்கலம் தனது பத்து வருட பயணத்தை முடிக்கப்போகிறது. ஆம், அது புதனோடு சென்று மோதப்போகிறது. இதுவும் அதனது ஆய்வுத்திட்டத்தில் ஒரு பகுதிதான். ஏப்ரல் 30 அளவில் செக்கனுக்கு 3.91 கிலோமீட்டர் வேகத்தில் அது புதனோடு மோதும். அது புதனில் வளிமண்டலத்தில் நுழையும் போது சேகரிக்கும் தகவல்களையும், அது மோதும் வரை கிடைக்கும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பிவிட்டே அது தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

புதனைப் பற்றி 10 விடயங்கள்

புதனைப் பற்றி 10 விடயங்கள்

சூரியத்தொகுதியிலேயே மிகச் சிறிய கோள் புதன் – பூமியின் நிலவைவிட சற்றுப் பெரியது. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும்…