- சூரியத்தொகுதியிலேயே மிகச் சிறிய கோள் புதன் – பூமியின் நிலவைவிட சற்றுப் பெரியது.
- சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுவாகும் – சூரியனில் இருந்து அண்ணளவாக 58 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.
- புதன், தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 59 பூமி நாட்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை வெறும் 88 பூமி நாட்களில் சுற்றி வந்துவிடும்.
- புதன், பூமியைப் போல ஒரு திண்மக்கோளாகும்.
- புதனுக்கு மிக மிக மெல்லிய வளிமண்டலம் உண்டு. இது ஒக்சீசன், சோடியம், ஐதரசன், ஹீலியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
- புதனுக்கு துணைக்கோள்கள் கிடையாது. புதனுக்கு, சனியைப் போல அதனைச் சுற்றி வளையங்கள் கிடையாது.
- புதனை இதுவரை 2 வின்கலங்களே சென்று ஆராய்ந்துள்ளன. 1974 இல் மரினர் 10 மற்றும் 2011 இல் மசென்ஜர்.
- புதனில் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.
- பகல்வேளையில் மேற்பரப்பு வெப்பநிலை 430 பாகை செல்சியஸ் ஆகவும், இரவில் -180 பாகை செல்சியசாகவும் குறைவடைகின்றது.
- புதனில் இருந்து சூரியனைப் பார்த்தால், பூமியில் தெரிவதைவிட, சூரியன் மூன்று மடங்கு பெரிதாகத் தெரியும்.
மூலம்: நாசா