வெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்

  1. வெள்ளி, பூமியைவிட சிறிதளவே சிறியது. பூமியின் விட்டம் 12742 km, வெள்ளியின் விட்டம் 12104 km.

  2. சூரியனுக்கு அண்மையில் இருக்கும் இரண்டாவது கோள். இது சூரியனில் இருந்து 108 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

  3. வெள்ளியில் ஒரு நாள் என்பது, பூமியில் 243 நாட்களாகும். அதாவது வெள்ளி தன்னைத் தானே சுற்ற 243 பூமி நாட்கள் எடுக்கின்றது.

  4. வெள்ளி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 225 பூமி நாட்கள் எடுக்கின்றது.

  5. வெள்ளி ஒரு பாறைக்கோளாகும். இதனது மேற்பரப்பு, எரிமலை வெடிப்புக்களால் உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  6. வெள்ளியின், தடிப்பான வளிமண்டலம், காபனீர்ஒக்ஸைட், நைதரசன் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மேகங்கள், சல்பூரிக் அமிலத் துளிகளால் ஆக்கப்பட்டுள்ளது.

  7. வெள்ளிக்குத் துணைக்கோள்கள் இல்லை.

  8. இதுவரை வெள்ளியை கிட்டத்தட்ட 40 விண்கலங்கள் பார்வையிட்டுள்ளன. 1990 களில் சென்ற மெகல்லன் விண்கலம், வெள்ளியின் 98% ஆன மேற்பரப்பை கணக்கெடுத்தது.

  9. வெள்ளியின் மேற்பரப்பு வெப்பநிலை 480 பாகை செல்சியஸ். சூரியத்தொகுதியிலேயே அதிகளவான மேற்பரப்பு வெப்பநிலையை கொண்ட கோள் இது. இங்கு உயிர்கள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  10. வெள்ளி மட்டுமே கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் ஒரே ஒரு கோளாகும். இங்கு சூரியன் மேற்கில் உதித்து, கிழக்கில் மறையும்.