- சூரியன் ஒரு விண்மீன். விண்மீன்கள் திண்ம மேற்பரப்பைக் கொண்டிருக்காது. இது முழுதும் வாயுக்களால் உருவான ஒரு கோளவடிவப் பொருள். சூரியனில் அண்ணளவாக 70% ஐதரசன், 28% ஹீலியம் காணப்படுகிறது. மேலும் கார்பன், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 1.5% உண்டு.
- சூரியத்தொகுதியின் மையத்தில் இருக்கும் சூரியனில், சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99.8% ஆன திணிவு இருக்கிறது.
- சூரியன் ஒரு வீட்டின் வாசல்க் கதவின் அளவிருந்தால், பூமி ஒரு பைசா நாணய அளவிருக்கும்.
- சூரியனுக்கு திடமான திண்ம உடல் இல்லாததால், சூரியனின் வேறு பகுதிகள், வேறு வேகத்தில் சுழல்கின்றான். சூரியன் தன்னைத் தானே சுற்ற, மத்தியில் 25 பூமி நாட்களும், துருவங்களில் 36 பூமி நாட்களும் எடுக்கின்றது.
- சூரியனது “வளிமண்டலத்திலேயே”, சூரியப் புள்ளிகள் (sun spots) மற்றும் சூரிய நடுக்கம் (solar flares) என்பன ஏற்படுகின்றன. சூரியனது வெளி வளிமண்டலமானது, ப்ளுட்டோவின் சுற்றுப் பாதைக்கும் வெளியில் செல்லும் அளவிற்கு பெரியது.
- சூரியனைச் சுற்றி, 8 கோள்களும் (planets), குறைந்தது 5 குறுங்கோள்களும் (dwarf planets), ஆயிரக்கணக்கான சிறுகோள்களும் (asteroids), லட்சக்கணக்கான வால்வெள்ளிகளும் சுற்றி வருகின்றன.
- சூரியனுக்கு எந்தவித வளையங்களும் (சனிக்கு இருப்பதைப் போல) கிடையாது.
- சூரியனது சக்தி இல்லாவிட்டால், பூமியில் உயிர் தோன்றி இருக்கவோ, அல்லது வாழவோ முடியாது.
- சூரியனது மேற்பரப்பு வெப்பநிலை அண்ணளவாக 5500 பாகை செல்சியஸ்.
- சூரியனது மையப் பகுதியில் வெப்பநிலை 15 மில்லியன் பாகை செல்சியஸ்.
Posted inவிண்ணியல்