
காற்றோடு கதை பேச
காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன் சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன் இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே…

காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன் சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன் இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே…

ஒளியின் ஊடுருவலில் நிழல்கள் தெரியலாம் இலைகளின் மேலே படர்ந்துள்ள அந்த நிழல்களின் முகங்களை வரைந்தவன் யார்? அழகழகான வட்டங்கள் முக்கோணங்கள் மற்றும் சதுரங்களும் சலனங்களும் எண்ணிலடங்கா பின்பங்களை வண்ணமயமாக தெறித்துச் செல்கிறதே வரைந்தவன் வரைந்துவிட்டான், காலத்தில் அவற்றை பதித்துவிட்டான் பார்ப்பவர் மனங்கள் தேன் கண்ட…

தூரத்தில் பிம்பங்கள் சிறிதாகவே தெரிகிறது தன்னை நோக்கி நகரும் புள்ளியின் மையத்தில் அது தன்னைதானே பெரிதாக்கி கொள்கிறது நிழலும் அதன் பாதையில் உண்டு அதற்கு என்று நிஜமும் அதன் கைகளில் உண்டு நிழலின் அமைப்பினிலே நம் கண்களினூடு கட்சிகளை அது நிஜமாக்கிக்கொண்டே போகிறது

இனம்புரியாத கவலை நெஞ்சை மெதுவாக வருடுகிறது நரம்பறுந்த இரத்தப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பது போல மெல்லிய கவலை மை இருளாக என் உலகத்தை நிரப்புகிறது இதுவரை நடந்தது நன்றாக நடந்து விட்டது இனிமேலும், நடப்பது நன்றகேவே நடக்குமா