நிழலுக்கு என்று ஒரு நிஜம்

தூரத்தில் பிம்பங்கள் சிறிதாகவே தெரிகிறது
தன்னை நோக்கி நகரும் புள்ளியின் மையத்தில்
அது தன்னைதானே பெரிதாக்கி கொள்கிறது
நிழலும் அதன் பாதையில் உண்டு
அதற்கு என்று நிஜமும் அதன் கைகளில் உண்டு
நிழலின் அமைப்பினிலே நம் கண்களினூடு
கட்சிகளை அது நிஜமாக்கிக்கொண்டே போகிறது

முடிந்தால் பிரித்துப்பாருங்கள்
முடியாதென்ற ஒன்றில் அது புள்ளியாய் தொடங்கும்
மனதின் பின்பங்களில் அது காட்டும் கேளிக்கை
முடிந்ததற்கும் முடியததத்கும் முடிச்சை அவிழ்த்துச் செல்லும்
நிழலுக்கென்று ஒரு நிஜத்தை அது காட்டிவிட்டது
நம் மனமும், நம் கண்களினூடே
அந்தப் புள்ளியை நோக்கி பயணிக்கின்றது.

சிறி சரவணா

படம்: இணையம்

Previous articleஎன்னுள்ளே என்னை தேடி
Next articleஉச்சக்கட்ட ஞானோதயம்