உச்சக்கட்ட ஞானோதயம்

ஜென் கதைகள் மிக அருமையானவை, சிறிய சுவாரசியமான கதைகளினூடாக மனித வாழ்வியலின் தத்துவங்களை புரிய வைக்கக்கூடிய கருவிகள். ஜென் என்பது ஒரு சமயமோ அல்லது கடவுள் சார்ந்ததோ அல்ல, அது மனித மனம் சார்ந்தது, மனித மனத்தின் ஆற்றலை மனிதனுக்கு புரியவைக்கக்கூடிய ஒரு நிலை அவ்வளவுதான்.

மனமென்னும் கிண்ணம்

ஒரு முறை பேராசிரியர் ஒருவர் ஜென் துறவியை சந்திக்க வந்தார். வந்தவருக்கு துறவியும் தேனீர் வழங்கி உபசரித்துக்கொண்டிருக்கும் பொது வந்த பேராசிரியர் ஜென்னைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்தவாறே துறவியும் தேநீர் கிண்ணம் நிரம்பி வழியும் வரை தேனீரை ஊற்றிக்கொண்டே இருந்தார். இதைக் கவனித பேராசிரியர், “கிண்ணம் நிரம்பி விட்டது, கிண்ணம் நிரம்பி விட்டது, இனியும் ஊற்றதீர்கள்” என்று ஜென் ஆசானை நோக்கி சத்தமிட்டார். அமைதியாக ஊற்றுவதை நிறுத்திவிட்டு ஜென் ஆசான் இப்படி சொன்னார் “நீங்களும் இந்தக் கிண்ணம் மாதிரித்தான், உங்கள் மனம் என்னும் கிண்ணத்தை முதலில் வெறுமையாகாமல் என்னால் எப்படி உங்களுக்கு ஜென் கற்றுத்தரமுடியும்?”

ஞானோதயம்

ஒருமுறை ஜென் தலைமை ஆசிரியர், தனது மாணவ துறவி ஒருவர் அதி உச்சக்கட்ட ஞானோதயம் அடைந்துவிட்டதாக அறிவித்துவிட்டார், இதைக் கேள்விப்பட மொத்த குருகுலமும் அந்த மாணவரை சந்தித்து “நீங்கள் உச்சக்கட்ட ஞானோதயம் அடைந்து விட்டீர்களாமே? உண்மையா?” என்று வினவினர்.

“ஆம் உண்மைதான்” என்றார் துறவி

“இப்போது எப்படி உணருகின்றீர்கள்?”

“எப்போதும் போல முட்டாளாகவே” என்றார் துறவி.

கதைகள் தமிழ் மொழியாக்கம் : சிறி சரவணா