என்னுள்ளே என்னை தேடி

என்னுள்ளே என்னைத் தேடி

இனம்புரியாத கவலை நெஞ்சை மெதுவாக வருடுகிறது
நரம்பறுந்த இரத்தப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பது போல
மெல்லிய கவலை மை இருளாக என் உலகத்தை நிரப்புகிறது
இதுவரை நடந்தது நன்றாக நடந்து விட்டது
இனிமேலும், நடப்பது நன்றகேவே நடக்குமா


மை இருட்டில் கண்விழித்து காத்திருதுந்தும் என்ன பயன்
கண் தன் வேலையை செய்ய கதிர் இல்லையே
காது விழித்து காத்திருந்து இருக்கலாம்
மை இருட்டில் பார்க்கத்தான் முடியாது என்றிருந்தேன்
கேட்கவும் முடியாதென்று ஒருவரும் சொல்லவில்லையே

இப்போது புரிகிறது… மை இருட்டில் கேட்கவும் முடியாதென்று – அவர்கள்
கூவி இருக்கலாம்… அது என் காதுக்கு வரவில்லையே
காதுக்கு வராத அரவம் தேடி காரணம் தேடினேன் நான்
நான் படித்த கல்வி, காரணம் பிழை என்றது
சத்தம் அது எட்டுவைத்து ஓடி வர.. கதிர் அது தேவை அல்லவே
மை இருட்டு கயிரெடுத்து கட்டிவிட சத்தமொன்றும் கதிருமல்லவே

தவறு… எங்கேயோ நடந்து விட்டது
காரிருள் எங்கே… கதிர் ஒளியும் எங்கே
சத்தத்தை தேடி திசை திருப்பப்பட்டேன்
நினைவு வரும்போது காரிருள் பூரனமாயிற்று
காரணமில்லாமல் காரியம் இல்லை என்பார்கள்
இங்கு காரியம் காரணத்தை கற்பிக்க முயலுகின்றது – சிரிக்கவா
என்னுள்ளே என்னை தொலைத்து விட்டு
திசை தெரியாமல் நிற்கிறேன்
கடிகார சத்தம் என்னை மீண்டும்
உலகிற்கு கொண்டு வரும் வரை
திசை தெரியாமல் நிற்கிறேன் நான்

சிறி சரவணா

படம்: இணையம்