உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே பற்பல குளிர்காலங்களும், எண்ணிலடங்கா கோடைகளும் நீண்ட நாட்களாக... எதிர்காலத்தின் விளிம்பிலே... நாட்களும் கடந்துவிட்டன... நேரமும்…
காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன்
சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன்
இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற
அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே...
இனம்புரியாத கவலை நெஞ்சை மெதுவாக வருடுகிறது
நரம்பறுந்த இரத்தப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பது போல
மெல்லிய கவலை மை இருளாக என் உலகத்தை நிரப்புகிறது
இதுவரை நடந்தது நன்றாக நடந்து விட்டது
இனிமேலும், நடப்பது நன்றகேவே நடக்குமா