ஒரு சிறப்பான குடும்ப புகைப்படம்

ஒரு சிறப்பான குடும்ப புகைப்படம்

விண்வெளிப் புகைப்படங்கள் எல்லாமே அழகானதும், அற்புதமானதாகவும் இருப்பினும், சில குறிப்பிடத்தக்க படங்கள் சிறப்பானதாக அமைந்துவிடும். இவை அரிதான சில விடயங்களை முதன்முறையாக படத்தில் கொண்டிருக்கும்.
படவுதவி: ESA/Hubble, M. Kornmesser

பூமி விசேடமானதா?

பிறவிண்மீன் கோளான K2-18b யின் வளிமண்டலத்தில் நீர்த் துளிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஒரு உற்சாகமான செய்திதான்.
இளம் கோள்களை கண்டறிய புதிய உத்தி!

இளம் கோள்களை கண்டறிய புதிய உத்தி!

ஏலியன் உலகங்களை கண்டறிய பல புதிய உத்திகளை விஞ்ஞானிகள் உருவாகியுள்ளனர். தள்ளாடும் விண்மீன்கள், பிரகாசம் குறையும் விண்மீன்கள் என்பனவற்றை அவதானிப்பது அவற்றைச் சுற்றிவரும் கோள்களைக் கண்டறியப் பயன்படும் இரண்டு முறைகள். ஆனாலும் புதிதாகப் பிறந்த கோள்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் முதலிருந்து வேறு ஒரு முறையைக் கண்டறியவேண்டிய தேவை ஏற்பட்டது.
பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?

பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?

புதிதாக பிறந்த விண்மீன்களைச் சுற்றியும் தட்டுத் தட்டாக வாயுக்கள் சூழ்ந்து காணப்படும். இதனை நாம் “பிரபஞ்சப் பனி” என்றும் அழைக்கலாம். பூமியில் உள்ள பனிப் படலம் காலைவேளையில் மறைவதைப் போல, பெரிய பிரகாசமான விண்மீன்களைச் சுற்றியிருக்கும் வாயுக்கள் வேகமாக மறைந்துவிடும் என்று விண்ணியலாளர்கள் கருதினர்.
ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?

ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?

புரோக்சிமா செண்டோராய் (Proxima Centauri) பூமியில் இருந்து வெறும் 4.2 ஒளியாண்டுகள் தொலைவிலேயே காணப்படுகிறது. ஆகவே இதனைச் சுற்றிவரும் பாறைக்கோள், எமக்கு மிகவும் அருகில் இருக்கும் பிற-விண்மீன் கோளாகும்.
இளம் விண்மீனைச் சுற்றி உருவாகும் குழந்தைக் கோள்கள்

இளம் விண்மீனைச் சுற்றி உருவாகும் குழந்தைக் கோள்கள்

ஒரு கோள் வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? இதுவரை நாம் எவ்வளவு காலம் எடுக்கும் என்று எண்ணியிருந்தோமோ அதனைவிடக் குறைவான காலமே ஒரு கோள் வளர்வதற்கு எடுக்கிறது!
ஸ்னோ வைட்டும் ஐந்தாவது குள்ளனும்

ஸ்னோ வைட்டும் ஐந்தாவது குள்ளனும்

‘ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்’ கதையை நீங்கள் குழந்தைப் பருவத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? அந்தக் கதையில் வரும் குள்ளர்களைப் போலவே நமது சூரியனுக்கும் ஐந்து குள்ளர்கள் உண்டு – அதாவது குறள்கோள்கள் என அழைக்கப்படும் இவை முறையே, சீரிஸ், ஈரிஸ், மேக்மேக், ஹோவ்மீயா மற்றும் புளுட்டோ ஆகும்.
சனியின் வளையங்கள் புதியது

சனியின் வளையங்கள் புதியது

பூமியில் டைனோசர்கள் உலாவிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இந்த வளையங்கள் சனியைச் சுற்றி உருவாகியிருக்கவேண்டும் என்பது இவர்கள் முடிவு - டைனோசர்களிடம் பாரிய தொலைக்காட்டிகள் இருந்திருந்தால், இந்த அழகிய பிரமாண்ட நிகழ்வை அவர்கள் பார்த்திருக்கலாம்!
சூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்

சூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்

உங்கள் வீட்டில் நீங்கள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சுவற்றில் மாட்டிவைத்திருக்கலாம். அதேபோலவே விண்ணியலாளர்கள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் தொகுதியில் கோள்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
ஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு

ஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு

நானெல்லாம் பாடசாலையில் கல்விகற்கும் போது சூரியத்தொகுதியில் ஒன்பது கோள்கள் இருக்கின்றன என்றுதான் படித்தேன். அப்போது புளுட்டோவும் ஒரு கோளாக இருந்தது. பின்னர் 2006 இல் சர்வதேச விண்ணியல் கழகம் (IAU), புளுட்டோவை குறள்கோள் (dwarf planet) என அறிவித்தது.