Posted inவிண்ணியல்
மீண்டும் ஒரு புதிய குறள்கோள் கண்டுபிடிப்பு
மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் புதிய குறள்கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். புளுட்டோவின் பாதி அளவான இந்தக் குறள்கோள், அண்ணளவாக சூரியனை புளுட்டோவின் சுற்றுப்பாதையைப் போல இரண்டு மடங்கு தொலைவில் சுற்றிவருகிறது.