பரிமாணம், சஞ்சிகை உலகிற்கு ஒரு புதிய சொல்லாக இருக்கலாம், பரிமாணம் என்றால் அளவீடு, பருமன், வேறொரு பார்வை அல்லது கோணம் என்று அகராதி விளக்கம் தருகிறது. இதுதான் எங்கள் நோக்கமும், ஒரு புதிய முயற்சி, ஏனைய இணைய இதழ்களைப் போலலாமல், தமிழில் எழுத ஒரு முயற்சி.
பல்வேறு பட்ட நண்பர்களுக்கும், ஏனைய கலைஞர்களுக்கும் ஒரு மாறுபட்ட வாய்ப்புகளை வழங்ககூடிய தளமாக இது இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். தரமான படைப்புக்கள், கவிதைகள், கதைகள், சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகள் மேலும் பல இந்த பரிமாணத்தில் இணைந்துகொள்ளும்.
இதை தொடங்கிய நானோ, அல்லது நண்பர் அமர்நாத்தோ முழுநேர எழுத்தாளர்களோ அல்லது தொழில்ரீதியாக எழுத்துத்துறையில் இருப்பவர்களோ அல்ல. இருந்தும் எழுத்தில் உள்ள ஆர்வம் எம்மை தூண்டிவிட்டது. தரமான எழுத்துக்கு ஒரு ஊடகமாக கிழக்கிலங்கையில் இருந்து ஒரு முயற்சி.
முடிந்த மட்டும் இலக்கணப்பிழை இன்றி எழுத, எழுதியவற்றை சரிபார்க்க முனைகிறோம், அப்படி இருந்தும் மேலதிகமாக எதாவது எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால், அவற்றை சுட்டிக்காட்டவும் நீங்கள் தயங்க வேண்டாம்.
தரமான எழுத்துக்கும் படைப்பிற்கும் உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புதிய பயணம் தொடங்குகிறது.
நன்றி
சிறி சரவணா மற்றும் அமர்நாத்