விண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை

எழுதியது: சிறி சரவணா

ஜூலை 29 இல் விண்டோசின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 வெளிவரப்போகிறது. தற்போது உள்ள பதிப்பான விண்டோஸ் 8.1 இற்கு அடுத்ததாக விண்டோஸ் 10 என்ற பெயரிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசை வெளியிடுகிறது.

விண்டோஸ் 10 பல புதிய அம்சங்களை தன்னகத்தே உள்ளடக்கி இருப்பது ஒரு விடயமென்றால், முந்தய பதிப்பான விண்டோஸ் 8 இல் விட்ட பல பிழைகளையும் இந்தப் பதிப்பில் திருத்தி இருப்பது ஒரு மிக முக்கியமான விடயம்.

விண்டோஸ் 8 இல் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி, அதனது மிக முக்கிய அம்சமான ஸ்டார் மெனுவை நீக்கியது. விண்டோஸ் 7 ஐ விட விண்டோஸ் 8 மிக வினைத்திறனாகச் செயற்பட்டாலும் சாதாரண பயனர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் பாவனைவிடயங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது விண்டோஸ் 8 இன் தோல்விக்கு வழிவகுத்து எனலாம்.

இப்படியான பல பிரச்சினைகளை களைந்து, விண்டோஸ் 10 தற்போது வெளிவரவுள்ளது. அதில் இருக்கும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் பார்க்கலாம்.

மீண்டும் ஸ்டார்ட் மெனு

விண்டோஸ் 10 மீண்டும் ஸ்டார்ட் மெனுவைக் கொண்டுவந்துள்ளது, ஆனால் பழைய விண்டோஸ் 7 இல் இருந்த ஸ்டார்ட் மெனு போல அல்லாமல், பல்வேறு பட்ட புதிய அம்சங்கள் இதில் உண்டு. குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, விண்டோஸ் 8இல் அறிமுகப்படுத்தப்பட்ட “லைப் டைல்ஸ்” (live tiles) என்ற ஐகான்களை தற்போது ஸ்டார்ட் மெனுவிலும் பார்க்கலாம். அதுபோல வழமையான பழைய முறைப்படி உங்கள் ப்ரோக்ராம்களை ஸ்டார்ட் ம,மெனுவைப் பயன்படுத்தி தேடிக்கொள்ளலாம்.

screen_shot_2015-07-09_at_1.50.19_pm

ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் ஒரு புதிய அம்சம், நீங்கள் விரும்பினால் விண்டோஸ் 8 இல் வருவது போல முழுத் திரை ஸ்டார்ட் மெனுவாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கோர்டானா என்னும் டிஜிட்டல் உதவியாளர்

விண்டோஸ் மொபைல் 8.1 இஸ் அறிமுகப்படுத்தப்பட்ட கோர்டானா (cortana) எனப்படும் “டிஜிட்டல் உதவியாளினி” ஐபோனில் இருக்கும் “சிரி” மற்றும் ஆண்ட்ராய்டு “கூகிள் நொவ்” போன்றதொரு தானியங்கி உதவிப் ப்ரோக்ராம் ஆகும். கோர்டானாவுடன் நீங்கள் உரையாடுவதன் மூலம் பல கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

screen_shot_2015-07-09_at_1.47.36_pm

கோர்டானா, ஸ்டார்ட் மேனுவுக்க்ப் பக்கத்தில் அமைந்திருக்கும். உங்கள் கோப்பு மற்றும் இணையத்தேடலையும் இதுவே உங்களுக்குத் தேடித்தரும். இதிலிருக்கும் முக்கிய அம்சம், நீங்கள் அதனிடம் கதை வேண்டும் என்றுசொன்னால், ஒரு கதை கூடச் சொல்லும். வயதை மட்டும்கேட்டுவிடவேண்டாம் (ஹிஹி!)

எதிலும் தொழிற்படும் “யுனிவேர்சல் ஆப்ஸ்”

விண்டோஸ் 10 ஐ மைக்ரோசாப்ட் உருவாக்கும் போதே இது எல்லாவிதமான கருவிகளிலும் தொழிற்படவேண்டும் என்ற நோக்கோடு உருவாகினர். அதாவது ஒரே இயங்குமுறை, உங்கள் கணணியிலும், டப்களிலும் மற்றும் உங்கள் கைபேசிகளிலும்!

இப்படி எல்லா கருவிகளிலும் விண்டோசை இலகுவாக இயங்கவைக்க, அல்லது எல்லோரும் பயன்படுத்த நிறைய ஆப்ஸ் தேவைப்படும்! அனால் ப்ரோக்ராமர் ஒவ்வோர் கருவிக்கும் தனித்தனியாக ஆப்ஸ் உருவாக்குவது என்பது மிகுந்த சிரமமான காரியம். இதற்காக மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்திய ஒரு எளிய முறையே “யுனிவேர்சல் ஆப்ஸ்”.

இதில் இருக்கும் மிகப்பெரிய நன்மை, யுனிவேர்சல் ஆப்ஸ் ஆக ஒரு ஆப்பை உருவாகிவிட்டால், அது விண்டோஸ் இயங்குமுறை இருக்கும் கணணி, டப்ஸ் மற்றும் கைபேசிகளில் எந்தவித மாற்றமும் இன்றி அழகாகத் தொழிற்படும்.

புதிய இனைய உலாவி – எட்ஜ் (Edge)

கிட்டத்தட்ட விண்டோஸ் 95 காலத்தில் இருந்து விண்டோசின் ஒரு பாகமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இனைய உலவி இனி இல்லை! மைக்ரோசப்ட் நிறுவனம், புதிதாக மைக்ரோசாப்ட் எட்ஜ் என்ற இனைய உலாவியை விண்டோஸ் 10 பதிப்போடு அறிமுகப்படுத்துகிறது.

screen_shot_2015-07-09_at_1.48.07_pm

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இற்கும் இதற்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், இந்த எட்ஜ் உலாவி, புதிய இணையத்தள நியமங்களை எல்லாம் கடைப்பிடிக்கிறது, ஆகவே கூகிள் குரோம் உலாவியில் எப்படி ஒரு தளம் தெரியுமோ அதேபோல இதிலும் எந்தப் பிரச்சினையும் இன்றி தெரியும்.

மற்றயது, கூகிள் குரோம், பயர்பாக்ஸ் உலாவிகளைப் போல இந்த எட்ஜ் உலாவியும் “add-ons” சப்போர்ட் செய்கிறது! அதுமட்டுமல்லாது, விண்டோசின் கோர்டானா இந்த உலாவியில் ஒரு அங்கமாக இருப்பது, உங்கள் தேடல்களை இலகுவாக்கும்.

புதிய ஒன்றிணைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை (Notification center)

உங்கள் ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் மொபைல் ஆகியவற்றில் இருக்கும் ஒரு வசதியான Notifications இப்போது வின்டோசிலும்! விண்டோஸ் போன் 8.1 இஸ் இருப்பது போன்ற ஒரு ஒன்றிணைக்கப்பட்ட அறிவிப்புப் பகுதியை விண்டோஸ் இப்போது கொண்டுள்ளது. ஆப்ஸ், அலாரம், மற்றும் விண்டோஸ் அறிவிப்புக்கள் எல்லாம் ஒரே இடத்தில் பெறமுடியும்.

screen_shot_2015-07-09_at_1.49.23_pm

அதுமட்டுமல்லாது, விண்டோஸ் 10 இல் இருக்கும் notifications பகுதியில் இலகுவாக விண்டோசின் பல்வேறுபட்ட அமைப்புக்களை மாற்றியமைக்கக் கூடிய பட்டன்களும் காணப்படுவது கூடுதல் சிறப்பு.

உள்ளினைக்கப்பட்ட மெய்நிகர் டெஸ்க்டாப் வசதி (Built-in Virtual Desktop)

Virtual desktop என்பதை பெரும்பாலான பாவனையாளர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இதுவரை காலமும் விண்டோஸ் இயங்குமுறைமை தன்னகத்தே virtual desktop வசதியை கொண்டிருக்கவில்லை, மாறாக பயனர்கள் பல்வேறு பட்ட ப்ரோக்ராம்களைக் கொண்டே virtual desktop வசதியை தங்கள் கணனிகளில் ஏற்படுத்திக்கொண்டனர்.

ஆனால் தற்போது விண்டோஸ் 10 பதிப்பு தன்னகத்தே இந்த virtual desktop வசதியைக் கொண்டிருப்பதால், பல்வேறுபட்ட ப்ரோக்ராம்களில் ஒரேநேரத்தில் வேலைசெய்வது இலகுவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட மெயில், காலண்டர் மற்றும் மியூசிக் ஆப்ஸ்

விண்டோஸ் 10 புதிதாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஆப்ஸ்களுடன் வருகிறது. இதில் மிக முக்கியமானது மெயில், கலண்டர் ஆப்ஸ். இவை Outlook கணக்கை மட்டும் பயன்படுத்துவது போல் வடிவமைக்கப்படாமல், Gmail, yahoo mail போன்ற வேறு பல சேவைகளையும்  இணைத்துப் பயன்படுத்துவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

mail-calendar-apps-windows-10

விண்டோஸ் 8 இலும் இந்த ஆப்ஸ்கள் இருந்தாலும், விண்டோஸ் 10 இல் இவை முழுவதுமாக மீண்டும் இலகுவாகப் பயன்படுத்தும் நோக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல விண்டோஸ் 10 Groove Music என்ற ஆடியோ ப்ரோக்ராமுடன் வருவதும் குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 8 இல் இருக்கும் விண்டோஸ் மீடியா பிளையர் என்ற ப்ரோக்ராமிற்கு பதிலாக இந்த புதிய ஆப்! பல புதிய வசதிகளுடன்!!

groove-music-new

புதிய செட்டிங்க்ஸ் ஆப்

விண்டோஸ் 8 இல் Control Panel இற்குப் பதிலாக, விண்டோஸ் செட்டிங்க்ஸ் உள்ளடக்கிய “செட்டிங்க்ஸ்” என்ற புதிய ஆப் இருந்தது, ஆனால் அது எல்லா செட்டிங்க்ஸ்களையும் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை.

விண்டோஸ் 10 இல் புதிய செட்டிங்க்ஸ் ப்ரோக்ராமை மைக்ரோசாப்ட் உருவாகியுள்ளது. இது பூரணமாக விண்டோஸ் செட்டிங்க்ஸ்களை தன்னகத்தே கொண்டிருப்பதுடன் பாவனைக்கும் இலகுவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

screen_shot_2015-07-09_at_1.51.00_pm

இவற்றையும் விட இன்னும் பல புதிய அம்சங்களுடன் விண்டோஸ் 10 பதிப்பு இந்த ஜூலை 29 இல் வெளிவர இருக்கிறது. விண்டோஸ் 10 மைக்ரோசாப்ட் மற்றும் விண்டோஸ் இயன்குமுறைமை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

படங்கள்: இணையம்