வானியற்பியலாளருடன் சில கேள்வி பதில்கள்

வானியற்பியலாளருடன் சில கேள்வி பதில்கள்

விண்ணியல் என்றவுடனே எமக்கு உடனடியாக ஞாபகம் வருவது அழகான விண்மீன் பேரடைகளின், கோள்களின், விண்மீன்களின் தொலைநோக்கி புகைப்படங்கள் தான். ஆனால் விண்ணியல் ஒரு விஞ்ஞானம். பூமிக்கு அப்பால் உள்ள பிரபஞ்ச விந்தைகளை கணக்கிட்டு கண்டறியும் கடின உழைப்பு அதற்குப் பின்னால் இருக்கிறது.

வால்வெள்ளிப் புயலினுள்ளே

வால்வெள்ளிப் புயலினுள்ளே

வால்வெள்ளிகள் சிலவேளைகளில் “அழுக்கான பனிக்கட்டிகள்” எனவும் அழைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அவை பனியாலும், தூசுகளாலும் உருவாகியிருப்பதுதான். இவை சூரியனுக்கு அண்மையில் பயணிக்கும் போது வெப்பத்தால் பனி கரைந்து விண்வெளியில் ஆவியாகிறது, அவ்வேளையில் அந்த நீராவியுடன் தூசுகளும் சேர்ந்தே விண்வெளியில் சிதறுகின்றன.
பூமியைப் போலவே கடல் கட்டமைப்பைக் கொண்ட சனியின் டைட்டான்

பூமியைப் போலவே கடல் கட்டமைப்பைக் கொண்ட சனியின் டைட்டான்

பூமியில் இருக்கும் சமுத்திரங்கள் நிலமட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறது. நாம் இந்த மட்டத்தை சராசரி கடல் மட்டம் என அழைக்கிறோம். நாசாவின் காசினி விண்கலத்தில் இருந்து கிடைக்கபெற்ற தரவுகளைக் கொண்டு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சனியின் துணைக் கோளான டைட்டானிலும் நமது பூமியைப் போலவே சராசரி கடல் மட்ட உயரத்திலேயே அங்கே இருக்கும் கடல்கள் காணப்படுகிறது.

ரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்

ரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்

ரேடியோ ஒலியை அதிகரிக்க விண்ணியலாளர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துவிட்டனர். ரேடியோவின் வால்யும் பட்டனை திருகுவதல்ல, பெரும் திணிவுக் கருந்துளையைத் திருகுவதுதான் அந்த முறை!

யுரோப்பா: உயிரைத்தேடி ஒரு பயணம்

யுரோப்பா: உயிரைத்தேடி ஒரு பயணம்

பூமியில் இருந்து விண்வெளியை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் கடலில்லாத கோளில் அது விழுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக்குறைவு என காமடியாகக் கூறுமளவிற்கு கடந்த தசாப்தத்தில் கோள்களைப் பற்றியும், துணைக்கோள்களைப் பற்றியும் நாம் கண்டறிந்த விடையங்கள் எம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன.

குயிலைப் புடிச்சி கூட்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்!

குயிலைப் புடிச்சி கூட்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்!

இன்று இந்தோனேசியாவின் ஜாவன் மழைக்காடுகள் ஆல்மோஸ்ட் மயானத்தைப் போல எந்தவித சலனமும் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. பாடித் திரிந்த பறவைகள் அனைத்தும் கூண்டினுள் பாடல் போட்டிக்காக வளர்க்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றன.

பச்சை ஜாவன் மக்பை எனப்படும் பாடும் பறவைகளை ஜாவன் காடுகளில் கடந்த பல ஆண்டுகளில் யாருமே பார்த்திருக்க முடியாது. காரணம் அளப்பெரிய ஜாவன் காட்டிலேயே வெறும் ஐம்பதிற்கும் குறைவான மக்பை பறவைகளே எஞ்சியிருக்ககூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அழகிய பச்சை நிற உடலையும், தனித்துவமான கொவ்வைப்பழம் போன்ற சிவப்பு நிற சொண்டையும் கொண்ட இந்த பச்சை மக்பை, பச்சைப்பசேல் என்ற ஜாவன் காடுகளில் இலகுவாக மறைந்திருந்தாலும், இவற்றின் தனித்துவமான பாடல் ஒலிகள் இவற்றின் இருப்பிடத்தை இலகுவாகக் காட்டிக்கொடுத்துவிடும்.