உலகின் மிகப்பெரிய உயிரினம் என்ன?

உலகின் மிகப்பெரிய உயிரினம் என்ன?

இந்தக் கேள்வியைப் பார்த்த உடனே நமக்கு ஆப்ரிக்க யானை, நீலத் திமிங்கிலம் போன்ற பெரிய விலங்குகள் ஞாபகம் வரலாம்.
ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?

ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?

புரோக்சிமா செண்டோராய் (Proxima Centauri) பூமியில் இருந்து வெறும் 4.2 ஒளியாண்டுகள் தொலைவிலேயே காணப்படுகிறது. ஆகவே இதனைச் சுற்றிவரும் பாறைக்கோள், எமக்கு மிகவும் அருகில் இருக்கும் பிற-விண்மீன் கோளாகும்.
உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்

உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்

“அது அப்படித்தான்” என்கிற பேச்சுக்கே அறிவியலில் இடமில்லை. ஆகவே தற்போது நாம் அவதானிக்கும் பிரபஞ்சத்தின் பண்புகளை விளக்கும் தெளிவான ஒரு அறிவியல் கோட்பாடு தேவைப்படுகிறது. அங்கேதான் இந்தப் பெருவெடிப்புக் கோட்பாடு வருகிறது.
உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

மனித மூளை, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகச் சிக்கலான அமைப்புக்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. நமது மூளையில் அண்ணளவாக 86 பில்லியன் நியுரோன்கள் உள்ளது என 2009 இல் ஒரு குழு ஆய்வுசெய்து முடிவை வெளியிட்டுள்ளது. நமது சூரியத் தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான “பால்வீதி”யில் அண்ணளவாக 200 – 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் – தேடலுக்கு ஒரு புதிய இடம்

எழுதியது: சிறி சரவணா

சில வருடங்களுக்கு முன் நாசாவின் விண்கலமான கசினி, சனியின் துணைக்கோளான என்சிலாடசில் வெப்பநீர் இயக்கம் இருப்பதற்கான தடயத்தைக் கண்டறிந்தது. பூமியின் ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் மாற்றங்களைப் போல இந்தத் துணைக்கோளிலும் இடம்பெறும் மாற்றங்களை அவதானிக்கும் போது, வேறு கோள்களில், எப்படி இந்த மாற்றங்கள், அந்தக் கோள்களின் பௌதீக அமைப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்றும் அறியலாம்.

நாசாவின் விண்வெளிவீரர் ஜான் க்ரன்ஸ்பில்ட், இந்த என்சிலாடஸ் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.

“என்சிலாடசில், கசினி கண்டறிந்த நீர் சார்ந்த செயற்பாடு, இந்தக் கோளின் மேற்பரப்புக்குக் கீழ் பெரிய கடல் இருப்பதற்கும், அங்குப் புவியியல் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கும், அதுமட்டுமல்லாது அங்கு உயிரினம் உருவாகத் தேவையான காரணிகளும் இருக்கலாம். இந்தச் சூரியத் தொகுதியில், உயிர் வாழவே முடியாது என்று கருதும் இடங்களில், இப்படியான செயற்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருப்பது, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே தனியாகவா இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை அளிப்பதற்கான சந்தர்பத்தை உருவாகுகிறது”.