விண்மீன் பேரடைகள் என்பவை பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்ட ஒரு தொகுதி. ஒவ்வொரு விண்மீன்களும் தனித்தனிக் கட்டமைப்பு என்றாலும் ஒவ்வொன்றின் ஈர்ப்புவிசையும் ஒன்றாக சேர்ந்தே பால்வீதி போன்ற விண்மீன் பேரடைகளை சிதையாமல் கட்டுக்கோப்புடன் பேணுகின்றன
Eta Carinae சுப்பர்நோவாவாக வெடிக்கத் தயாராக இருக்கிறது. அடுத்த வருடமோ, அல்லது அடுத்த ஒரு மில்லியன் வருடங்களிலோ அது வெடித்துவிடும். சூரியனைப் போல 150 மடங்கு திணிவைக்கொண்ட Eta Carinae சுப்பர்நோவாவாக வெடிப்பதற்கு ஏற்ற வேட்பாளர் தான்.
ஏலியன் உலகங்களை கண்டறிய பல புதிய உத்திகளை விஞ்ஞானிகள் உருவாகியுள்ளனர். தள்ளாடும் விண்மீன்கள், பிரகாசம் குறையும் விண்மீன்கள் என்பனவற்றை அவதானிப்பது அவற்றைச் சுற்றிவரும் கோள்களைக் கண்டறியப் பயன்படும் இரண்டு முறைகள். ஆனாலும் புதிதாகப் பிறந்த கோள்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் முதலிருந்து வேறு ஒரு முறையைக் கண்டறியவேண்டிய தேவை ஏற்பட்டது.
எப்போதாவது இரவு வானில் எத்தனை விண்மீன்கள் இருக்கும் என்று எண்ணிப் பார்த்ததுண்டா? அப்படி நீங்கள் எண்ணியிருந்தால், நீங்கள் மட்டும் அப்படி விதிவிலக்காக எண்ணவில்லை. விண்ணியலாளர்களும் இரவு வானில் எத்தனை விண்மீன்கள் இருக்கிறன என்று எண்ணுகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஏலியன் இனம் ஒன்று நமது சிறிய பூமியைக் கண்டறிந்து ஒரு நாள் முழுதும் எம்மை ஆய்வு செய்ய கருவிகளை அனுப்பினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். ஒரு பெரிய ஸ்கேனரைக் கொண்டு மொத்த பூமியையும் அவர்களால் படம்பிடிக்க முடியும்.
ஒரு கோள் வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? இதுவரை நாம் எவ்வளவு காலம் எடுக்கும் என்று எண்ணியிருந்தோமோ அதனைவிடக் குறைவான காலமே ஒரு கோள் வளர்வதற்கு எடுக்கிறது!
பிரபஞ்சத்தில் நடைபெறும் சமையல் என்பது, நம் வீட்டில் சமைப்பது போலவே; சரியான சேர்மானங்களை (மா, பால், முட்டை) சரியான முறையில் சேர்த்தால் (சூடான சமையல்ப் பாத்திரம்), அருமையான ருசியான ஒன்று இறுதியில் கிடைக்கும் (அப்பம்)!
நிலவற்ற ஒரு இரவில் நீங்கள் நல்ல இருளான வேளையில், வானை அவதானித்து இருந்தால், ஒரு மெல்லிய பிரகாசம் வானின் ஒரு பெரிய பகுதியை சூழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒரு பகுதி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வீங்கியது போலவும் தெரியும். அதுதான் எமது விண்மீன் பேரடையான பால்வீதியாகும்.