வியாழனில் ஒரு சூரியகிரகணம்

வியாழனில் ஒரு சூரியகிரகணம்

பூமியில் சூரியகிரகணம் என்பது நமக்கு எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விடையம்தான். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு கடப்பதால், பூமியின் மேற்பரப்பில் நிலவின் நிழல் விழும். இந்தப் பகுதிக்குள் இருப்பவர்களுக்கு சூரியனை நிலவு மறைப்பது போல இருக்கும்.
சுருங்கும் புயலின் மர்மம்

சுருங்கும் புயலின் மர்மம்

பூமியின் பல பகுதிகளிலும் பெரும் புயலும் மிதமிஞ்சிய இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றாலும், சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய புயலோடு இவற்றை ஒப்பிட முடியாது. வாயு அரக்கனான வியாழனில் நிகழும் பெரும் புயல்தான் "பெரும் சிவப்புப் புள்ளி" என அழைக்கப்படுகிறது.
வியாழனின் வானில் மின்னும் விளக்குகள்

வியாழனின் வானில் மின்னும் விளக்குகள்

வட மற்றும் தென் துருவங்களில் ஒளிர்ந்துகொண்டே அசையும் திரைச்சீலையாக இந்த ஆரோராக்கள் காணப்படும். சூரிய தொகுதில் இருக்கும் சில கோள்களில் உள்ள வானை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் எக்ஸ்-கதிர் ஆகியவற்றால் ஆரோராக்கள் நிறம் தீட்டுகின்றன. இந்தப் படத்தில் நாம் முதன் முதலாக வியாழனின் வடக்கு மற்றும் தென் துருவங்களில் ஒளிரும் ஆரோராவை பார்க்கின்றோம்.
ஜூனோ விண்கலம்: ஏன், எதற்கு & எப்படி?

ஜூனோ விண்கலம்: ஏன், எதற்கு & எப்படி?

வியாழனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலமே ஜூனோ. ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக வியாழனைச் சுற்றி வரத்தொடங்கியது விஞ்ஞான மற்றும் பொறியியல் துறையின் மகத்தான வெற்றி என்பது மிகையல்ல. ஜூனோவின் நோக்கம் என்ன? அதனைத் தயாரித்தது தொடங்கி, வியாழனில் அது கண்டறிய முனையும் விடயங்கள் என்ன என்பதனைத் தெளிவாக இங்கே பார்க்கப்போகிறோம்.
சூரியத் தொகுதியின் நாயகன்

சூரியத் தொகுதியின் நாயகன்

வியாழனே நமது சூரியத் தொகுதியின் நாயகன்! இந்தப் பாரிய கோள், மற்றைய அனைத்துக்கோள்களையும் ஒன்றாகச் சேர்த்தாலும், அவற்றின் திணிவைவிட அண்ணளவாக இரண்டரை மடங்கு அதிகமாகவே திணிவைக் கொண்டுள்ளது. இப்படியாக அதிக திணிவைக் கொண்டிருப்பதனால், இந்த வியாழக்கோள் அதிகளவான ஈர்ப்புவிசையையும் கொண்டுள்ளது, இந்த அதிகப்படியான ஈர்ப்புவிசையால், சூரியத்தொகுதியில் மிக முக்கிய ஒரு அங்கத்தவராக இருப்பதுடன், பூமியில் உள்ள உயிர்களையும் பாதுகாக்கிறது.
ப்ளுட்டோவிற்கு அடுத்து?

ப்ளுட்டோவிற்கு அடுத்து?

எழுதியது: சிறி சரவணா

நாம் சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் சென்று பார்த்தாயிற்று. 1980 களில் புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள் வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அருகில் சென்று அவற்றைப் படம் பிடித்தது மட்டுமன்றி, அவற்றின் கட்டமைப்பு, காந்தப்புலம் போன்ற தகவல்களையும் எமக்குத் தெரியப்படுத்தியது.


சூரியத் தொகுதியைப் பற்றி அறிந்துகொள்ள எனது “சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்” என்ற இலவசமின்னூலை பார்க்கலாம்!


இதுவரை அருகில் சென்று விசிட் அடிக்காமல் இருந்த ஒருவர், மிஸ்டர் ப்ளுட்டோ! அவரையும் நாசாவின் நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் சென்று படம்பிடித்து அனுப்பிவிட்டது. இப்போது நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் கைப்பர் பட்டியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் சில பல ப்ளுட்டோ போன்ற சிறு கோள்கள் போன்ற வான்பொருட்களை அது அருகில் சந்திக்கும், ஆனால் அது நடைபெற 2019 வரை காத்திருக்கவேண்டும்!